வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

ஜாதியை கையில் பிடிக்கிறாரா ரஞ்சித்? கேள்வி கேட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பல இயக்குனர்களும் சூர்யாவுடன் கூட்டணி அமைத்து வருகின்றனர்.

சூர்யா பிறந்தநாளன்று கூட சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நாளன்று சூர்யாவின் சொந்த தயாரிப்பில் உருவாகிவரும் ஜெய்பீம் படத்தின் போஸ்டரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெய்பீம் படத்தில் நடிகர் சூர்யா ஒரு வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற தலைப்பு அம்பேத்கர் மையப்படுத்தி உருவானது. ஒரே நாளில் சூர்யாவின் 2 படத்தின் போஸ்டர் வெளியாகியது ஆனால் பா ரஞ்சித் ஜெய்பீம் படத்தின் போஸ்டரை மற்றும் பாராட்டு பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுலயும் சூர்யாவின் பிறந்தநாளன்று சூர்யாவுக்கு கூட பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் ஜெய்பீம் படத்தை மட்டும் பேசியது கேவலமானது எனவும் சூர்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர்

பா ரஞ்சித் ஒரு ஜாதி வெறியர் என்பது வெளிப்படையாகவே பலருக்கும் தெரியும். ஆனால் மறைமுகமாக நான் ஜாதி பிடிக்காது அனைவரும் ஒன்று சேர வேண்டும் என நல்லவன் போல் நடிப்பதில் சாமர்த்தியமானவர் ரஞ்சித்.

pa-ranjith-about-education
pa-ranjith-about-education

தமிழ்நாட்டில் அனைத்து தலைவர்களும் மக்களுக்காக தான் போராடி உள்ளனர். ஆனால் மற்ற தலைவர்கள் யாரையுமே ரஞ்சித் இதுவரை பெருமையாக ஒரு வசனம் கூட வைத்ததில்லை. இதிலேயே தெரிகிறதா ரஞ்சித் ஒரு ஜாதி வெறி பிடித்தவர் என ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

குறிப்பாக காமராஜர் அனைத்து மக்களும் படிக்க வேண்டும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என விரும்பியவர். ஆனால் இதுவரை ஒரு படத்தில் கூட அம்பேத்கரை தவிர மற்ற எந்த தலைவரையும் குறிப்பிட்டு காட்டவில்லை ரஞ்சித் என பலரும் கூறி வருகின்றனர்.

மேலும் தற்போது மக்களே ஜாதியை மறந்து ஒன்று கூடி வருகின்றனர் ஆனால் படத்தில் அவ்வப்போது வசனங்களை வைத்து மீண்டும் ஜாதியை பெருமைபடுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளதாக ரஞ்சித் மீது குற்றம்சாட்டி வருகின்றனர் மற்றொரு தரப்பினர். மேலும் இனிமேலாவது அனைவரும் ஒன்று கூட வேண்டும் என பா ரஞ்சித் நினைத்தாள் அம்பேத்கர் தாண்டி மற்ற தலைவர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்

- Advertisement -spot_img

Trending News