வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பா ரஞ்சித்தை நம்பி ஏமாந்த பிரபல இயக்குனர்.. மேடையில் பெருமைக்கு பேசி கழட்டிவிட்ட சோகம்

தமிழ் சினிமாவில் உள்ள பிரச்சினையான இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனராக வலம் வருபவர் தான் பா ரஞ்சித்(pa ranjith). இவர் இயக்கும் படங்களும் சரி, தயாரிக்கும் படங்களும் சரி ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பி கொண்டேதான் இருக்கிறது.

அந்தவகையில் அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை என்ற படம் விரைவில் வெளியாக உள்ளது. படம் முழுவதும் ரெடியாகி தற்போது தியேட்டர் வெளியீடா அல்லது ஒடிடி வெளியீடா என்பதை மட்டும் முடிவு செய்ய வேண்டுமாம்.

இது ஒருபுறமிருக்க பா ரஞ்சித் படம் இயக்குவதை காட்டிலும் படம் தயாரிப்பில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தை தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தவரும் பா ரஞ்சித் தான். பரியேறும் பெருமாள் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அதன் வெற்றி விழாவில் சில இயக்குனர்களுக்கு பட வாய்ப்பு தருவதாக மேடையில் கூறியுள்ளார்.

அதில் ஒருவர்தான் லெனின் பாரதி என்ற இயக்குனர். இவர் மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை இயக்கியவர். இவருக்கு பா ரஞ்சித் தன்னுடைய நீலம் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் ஒரு படம் வாய்ப்பு தருவதாக மேடையில் தெரிவித்திருந்தார்.

இவருடன் சேர்த்து கிட்டத்தட்ட ஐந்து இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். ஆனால் தற்போது இப்போ ஆரம்பிக்கலாம் அப்போ ஆரம்பிக்கலாம் என இழுத்தடித்துக் கொண்டிருக்கிறாராம். இதனால் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை ஆகிவிட்டதோ என கவலையில் உள்ளாராம் லெனின் பாரதி.

lenin-bharathi-cinemapettai
lenin-bharathi-cinemapettai

Trending News