வியாழக்கிழமை, நவம்பர் 28, 2024

உலகமே அழிஞ்சாலும் சாதிவெறி அழியாது.. கொந்தளித்து ஸ்டாலினிடம் முறையிட்ட பா.ரஞ்சித்

தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் ஓரளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

அதன்பிறகு கார்த்தியை வைத்து மெட்ராஸ் எனும் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று கார்த்திக்கும், பா ரஞ்சித் தமிழ்சினிமாவில் நிரந்தரமான இடம் கிடைத்தது.

இந்த படத்தின் வெற்றியை வைத்து தான் பா ரஞ்சித் கபாலி மற்றும் காலா எனும் படத்தை இயக்கியிருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக சற்று தோல்வியை சந்தித்தது.

pa-ranjith
pa-ranjith

முழு வீடியோ இந்த லிங்கை கிளிக் செய்யவும்

ஆனால் திரைப்படத்தை தாண்டி ஜாதியை பற்றி பேசுவதே வாடிக்கையாக வைத்திருக்கும் பா ரஞ்சித். தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ள ஜாதி சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் என்னும் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருசில மதிப்புமிக்க பெரியவர்களை காலில் விழ வைத்துள்ளனர். இதனை பார்க்கும்போது பலருக்கும் இந்த மாதிரி கேவலமாக நடந்து கொள்ளும் நபர்களை என்ன செய்வது என திட்டி தீர்த்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில்கூட இப்படி ஜாதி வன்மம்பிடித்திருக்கிறார்கள் எனப் பா ரஞ்சித் சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -spot_img

Trending News