நெருங்கிய நண்பர்களாக இருந்த சந்தோஷ் நாராயணன் மற்றும் பா ரஞ்சித் இருவரும் சமீபத்தில் ஒரு பிரச்சனை காரணமாக மொத்தமும் பிரிந்து விட்டதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையில் சமீபத்தில் வெளியான என்ஜாய் என்ஜாமி(Enjoy Enjaami ) என்ற பாடலும், நீயே ஒளி என்ற பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு பாடலையும் எழுதி பாடியவர் அறிவு என்ற பாடகர். உடன் சந்தோஷ் நாராயணனின் மகளான தீ என்பவரும் பாடியிருந்தார். சமீபத்தில் ஒரு பிரபல நாளிதழில் இந்தப் பாடலைப் பாடிய பிரபலங்கள் பற்றிய செய்தி வெளியானது.
அதில் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருந்த நிலையில் அந்த இரண்டு பாடல்களுக்கும் ஆணிவேராக இருந்த அறிவு என்பவர் புறக்கணிக்கப்பட்டது தெரியவந்தது. யூடியூபில் கூட என்ஜாய் என்ஜாமி பாடலை எழுதியவர் அறிவு என்பது மறைக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து பா ரஞ்சித் சமீபத்தில் அறிவு புறக்கணிக்கப்படுகிறார் என்ற குற்றச்சாட்டை வைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நீயே ஒளி என்ற பாடலில் பணியாற்றிய பிரபலம் ஒருவர், பா ரஞ்சித்தின் பதிவும் அதற்கு வந்த கடுமையான விமர்சனங்களும் தன்னை வெகுவாக பாதித்தது எனவும், பா ரஞ்சித் வேண்டுமென்றே தமிழ் கலைஞர்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்குகிறார் எனவும் கூறியிருந்தார். சண்டையே தன்னுடைய மகள் தீ பெயர் வந்ததும் சந்தோஷப்பட்ட சந்தோஷ் நாராயணன் அறிவுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை? என்பதுதான்.
இது சந்தோஷ் நாராயணனை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பா ரஞ்சித் மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்குள்ளும் பனிப்போர் நடந்து வருவதாகவும் எப்போது வேண்டுமானாலும் வெடித்து சிதற வாய்ப்பு இருக்கிறது எனவும் நெருங்கிய வட்டாரங்களில் கூறுகின்றனர். இதுவரை தன்னுடைய படங்களுக்கு தொடர்ந்து சந்தோஷ் நாராயணனை பயன்படுத்தி வந்த பா ரஞ்சித் இனி அவருடன் சேர்ந்து பணியாற்ற மாட்டாராம்.
