புதன்கிழமை, ஜனவரி 22, 2025

மீண்டும் மீண்டும் அரசியல் சாயம் பூசும் பா ரஞ்சித்.. ப்ளூ ஸ்டார் படத்தால் வெடிக்கும் சர்ச்சை

Pa Ranjith : இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் தான் பா ரஞ்சித். தொடர்ந்து இவருடைய படங்களை எடுத்துக் கொண்டால் சாதிய அரசியல் படமாக இருந்து வருகிறது. அவருடைய முதல் படமான அட்டகத்தி தொடங்கி இப்போது வரை தனது படங்களின் மூலம் ஒரே மாதிரியான விஷயங்களை புகுத்தி வருகிறார்.

அதாவது ஒரு உயர்ந்த சாதியினரால் ஒடுக்கப்பட்ட சாதிக்கு என்ன பிரச்சனை ஏற்படுகிறது. தங்கள் உரிமைக்காக போராடி அதில் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் மையக்கருத்தாக இருந்தது. அவ்வாறு அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை என பா ரஞ்சித்தின் படங்கள் ஒரே சாயலில் உள்ளது.

ஒரு காலத்தில் உயர்ந்த சாதி மற்றும் கீழ் சாதி என்று பிரிக்கப்பட்டு பார்த்தாலும் இப்போதைய சூழலில் பெரும்பாலான இடங்களில் இது போன்று நடப்பதில்லை. ஏதாவது ஒரு சில கிராமப்புறங்களில் மட்டும் தான் நடந்து வருகிறது. பா ரஞ்சித் தொடர்ந்து தனது படங்களில் சாதிய அரசியலை காட்டி வருகிறார்.

Also Read : கிரிக்கெட்டை வைத்து தீண்டாமை அரசியல் பேசிய பா ரஞ்சித்.. ப்ளூ ஸ்டார் ட்விட்டர் விமர்சனம்

மேலும் இப்போது ஜெயக்குமார் இயக்கத்தில் சாந்தனு மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் ப்ளூ ஸ்டார் என்ற படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை நீலம் ப்ரொடக்ஷன் மூலமாக பா ரஞ்சித் தயாரித்திருந்தார். இந்தப் படமும் கிரிக்கெட்டை வைத்து சாதி அரசியல் பேசும் படமாக தான் இருக்கிறது.

மக்களே இப்போது அனைவரும் சமம் என்ற நிலைக்கு வந்த நிலையில் பா ரஞ்சித்தின் படங்கள் தொடர்ந்து இதுபோன்று வருவது சமூகத்திற்கு ஏற்புடையதாக இருக்காது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் பா ரஞ்சித் ஒரு கட்டமைப்புக்குள்ளே இருந்து கொண்டு படங்களை எடுக்கிறாரோ என்ற யோசனையும் எழுகிறது.

Also Read : சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் இரண்டாவது நாள் வசூல்.. யாருக்கு அடித்தது ஜாக்பாட்

Trending News