வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரு நடிகரை மட்டும் விட்டுக்கொடுக்காத பா ரஞ்சித்.. 6 படத்தில் வாய்ப்பு கொடுத்தும் கிடைக்காத அங்கீகாரம்

சென்னையை மையமாக வைத்து பல படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் பா ரஞ்சித். அட்டகத்தி தொடங்கி மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை என கம்மி பட்ஜெட் படங்களை இயக்கி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். தற்போது விக்ரமின் 61வது படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தன்னுடன் பணியாற்றிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்த அவர்களது படத்தை தயாரித்து வருகிறார். குறைந்த பட்ஜெட்டில் மக்களுக்கு பிடிக்கும் படியான படத்தை கொடுக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக உள்ளது.

Also Read : நட்சத்திரம் நகர்கிறது வைரலாகும் ட்ரெய்லர்.. பட்டையை கிளப்பிய பா.ரஞ்சித்

இதில் தன்னுடன் துணை நின்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற உள்நோக்கமும் உள்ளது. அவ்வாறு தன்னுடைய எல்லா படத்திலும் ஒரு நடிகருக்கு வாய்ப்பளித்து வருகிறார் பா ரஞ்சித். அதாவது தன்னுடைய முதல் படமான அட்டகத்தி படத்தில் இருந்த கலையரசு என்ற நடிகருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.

மெட்ராஸ், கபாலி, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது என அனைத்து படங்களிலும் கலையரசியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொடுக்கப்பட்டிருந்தது. மெட்ராஸ் படத்தில் இவரது அன்பு கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Also Read : பா ரஞ்சித்தை நம்பி ஏமாந்த பிரபல இயக்குனர்.. மேடையில் பெருமைக்கு பேசி கழட்டிவிட்ட சோகம்

அதேபோல் மத யானை கூட்டம் படத்திலும் கலையரசு அசத்தியிருப்பார். ஒவ்வொரு கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்படும் நிலையில் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தற்போது கலையரசன் சிம்புவின் பத்துத்தல படத்திலும் நடித்துள்ளார்.

இதுவரை பா ரஞ்சித் இயக்கிய 6 படங்களிலும் கலையரசனுக்கு வாய்ப்பு கொடுத்து வந்த நிலையில் அவரை ஒரு நல்ல நடிகராக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உள்ளார். விரைவில் கலையரசன் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : இரட்டை சகோதர்களாக மாறிய பா ரஞ்சித், மாரி செல்வராஜ்.. கெத்தாக வெளிவந்த புகைப்படம்

Trending News