செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது ரசிகர்களை கவருமா.? சினிமாபேட்டை ஒரு தரமான விமர்சனம்

அழுத்தமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து வித்தியாசமாக கொடுத்து வரும் பா. ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் மூலம் மற்றும் ஒரு வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளியாகி இருக்கிறது.

அரசியல் மற்றும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் கதைகளை நாம் பார்த்திருந்தாலும் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.

கதைப்படி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் பாண்டிச்சேரிக்கு வருகிறார் கலையரசன். அங்கு நடிப்பு பயிற்சியை கற்றுக் கொள்வதற்காக ஒரு நாடக கம்பெனியில் இணைகிறார். ஆனால் அவருக்கு அங்கு உள்ளவர்களுடன் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

அதேபோன்று காதலர்களாக இருக்கும் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் இருவரும் லவ் பிரேக்கப் செய்கின்றனர். இவர்களுடன் தன் பால் ஈர்ப்பாளர்கள், திருநங்கையின் காதல் என பல வித்தியாசமான மனிதர்கள் ஒரே இடத்தில் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது.

Also read : பா ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது எப்படி இருக்கு.? ரிலீஸுக்கு முன்னரே வெளிவந்த விமர்சனம்

அவர்கள் அனைவரும் இணைந்து அரசியல் சார்ந்த ஒரு நாடகத்தை நடத்த திட்டமிடுகின்றனர். அவர்களின் அந்த முயற்சி பலித்ததா, பிரேக் அப் செய்து கொண்ட காதலர்களின் நிலை என்ன, முரண்பாடான கருத்துக்களுடன் இருக்கும் கலையரசன் என்ன ஆனார் என்பதை பற்றி தான் இந்த படம் விரிவாக சொல்கிறது.

ரஞ்சித்தின் அனைத்து திரைப்படங்களிலும் இடம்பெறும் கலையரசன் இந்த படத்திலும் தன்னுடைய அழுத்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார். உடன் இருப்பவர்களிடம் அவமானப்படுவது, குடித்துவிட்டு சண்டையிடுவது போன்ற பல காட்சிகளில் அவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.

அதேபோன்று காளிதாஸ் ஜெயராம் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். இருப்பினும் அவருடைய கேரக்டர் இன்னும் கொஞ்சம் வலுவாக இருந்திருக்கலாம் என்பது ஒரு குறையாக இருக்கிறது. இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இருக்கிறது துஷாராவின் நடிப்பு.

Also read : ஓவர் ஆக்ட்டிங் செய்த நடிகர்.. சூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கண்டித்த சிவாஜி

அப்படி ஒரு அழுத்தமான கதாபாத்திரத்திற்கு கொஞ்சமும் வஞ்சனை செய்யாமல் நிறைவாக நடித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் அழுத்தமான பெண் கதாபாத்திரங்களுக்கு இவரை தைரியமாக தேர்வு செய்யலாம். அந்த அளவுக்கு பார்வை, பேச்சு என்று அனைத்திலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

இவர்களை தவிர மற்ற கதாபாத்திரங்களும் தங்களுடைய வேலையை கச்சதமாக செய்திருக்கிறார்கள். அந்த வகையில் ரஞ்சித் இந்த படத்தின் மூலம் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் அரசியல் சார்ந்த வசனங்களும் கைதட்டலை பெறுகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. விஷுவல் காட்சிகளும், பின்னணி இசையும் கவிதை போன்று சிலிர்க்க வைக்கிறது. இப்படி பல பாசிட்டிவ் விஷயங்கள் படத்தில் இருந்தாலும் சிறு சிறு குறைகளும் இருக்கிறது.

லவ் பிரேக்கப், தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல் போன்ற விஷயங்களை இன்னும் தெளிவாக காட்டி இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அவை எல்லாம் கதை ஓட்டத்தில் மறந்து விடுகிறது. அந்த வகையில் பா ரஞ்சித்தின் இந்த நட்சத்திரம் நன்றாகவே ஒளி வீசுகிறது.

சினிமா பேட்டை ரேட்டிங் – 3.5 / 5

Also read : மீண்டும் பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் மோகன் ஜி.. பகாசுரனில் மிரட்டும் செல்வராகவன்

Trending News