புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீண்டும் அட்டகத்தி ஸ்டைலில் களமிறங்கும் பா ரஞ்சித்.. அடுத்த பட டைட்டில் இதுதான்!

அட்டகத்தி என்ற அருமையான காதல் கதை மூலம் தமிழ் சினிமாவுக்கு என்றி கொடுத்த பா ரஞ்சித் அதன் பிறகு மெட்ராஸ், கபாலி, காலா போன்ற அரசியல் கலந்த அதிரடி படங்களை இயக்கி வந்தார்.

இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற படம் அமேசான் தளத்தில் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. இந்த படத்தில் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு வழக்கத்தைவிட எக்கச்சக்கமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

இதன்பிறகு முன்னணி நடிகரை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் பெரிய படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட பா ரஞ்சித் சிம்பிளாக அட்டகத்தி போன்ற காதல் படத்தை எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

அந்த படத்திற்கு “நட்சத்திரம் நகருகிறது” என பெயர் வைத்துள்ளார். பெரும்பாலும் ரஞ்சித்தின் வழக்கமான கதாநாயகர்கள் தான் இந்த படத்திலும் நடிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

மேலும் இதில் யார் ஹீரோ? ஹீரோயின்? என்ற அறிவிப்பு சார்பட்டா பரம்பரை பட ரிலீசுக்கு பிறகு வெளிவர உள்ளது. ரஞ்சித்திடம் புதிய காதல் படம் பற்றி கேட்டால், எல்லாம் ஒரு மாற்றம்தான் எனக் கூறுகிறார். ஆனால் அதற்கான காரணமே வேறு என்கிறது கோலிவுட்.

சமீபகாலமாக ஜாதி ரீதியாக ரஞ்சித்தின் பெயர் சமூக வலைதளங்களிலும் மக்களிடையேயும் கொஞ்சம் டேமேஜாகி உள்ளதை கருத்தில் கொண்டு இப்படி ஒரு படத்தின் மூலம் தன்னுடைய இமேஜை மாற்ற முயற்சிக்கிறார் என்கிறார்கள்.

pa-ranjith-cinemapettai
pa-ranjith-cinemapettai

Trending News