Pa. Ranjith-Armstrong: கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்படுத்திய விஷயம் என்றால் அது ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தான். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங்கை சென்னை பெரம்பூரில் கடந்த 5ம் தேதி ஒரு கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். அதுவும் உணவு டெலிவரி நபர்கள் போல வேடமிட்டு ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றால் கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள்.
இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், ஆர்ம்ஸ்ட்ரங்கை அங்கே இருந்த அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் இதில் சம்பந்தப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள்.
இருந்தாலும் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை என்றும் இவர்களை ஏவியவர்கள் யார் எனவும் போலீசார் கண்டுபிடிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி மற்றும் திருமாவளவன் உட்பட பலரும் தமிழ்நாட்டு அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்கள். இந்த சூழலில் கொலை செய்யப்பட்ட ஆர்ம்ஸ்ட்ராங் நெருங்கி பழகி வந்த இயக்குனர் பா ரஞ்சித் நேற்று அவருடைய எக்ஸ் தளத்தில் ஆளும் அரசை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டிருக்கிறார்.
அண்ணனுக்காக அரசாங்கத்துக்கு எதிராக போர் கொடி தூக்கிய பா ரஞ்சித்
சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகில் தான் இந்த படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்கப் போகிறீர்கள் என்பதை முதல் கேள்வியாக எழுப்பி இருக்கிறார்.
அடுத்து ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க தான் இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவித்திருக்கிறார்கள். அப்படி என்றால் அதற்கான ஆதாரங்கள் எங்கே? என்று கேட்டிருக்கிறார்.
சமீப காலமாக தலித் மக்களுக்கும், தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்க போகிறது. அவர்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்யப் போகிறது? இப்ப இருக்கிற பதட்டத்தையும் அச்சுறுத்தலையும் கலைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
எக்ஸ் தளத்தில் கேள்வியை எழுப்பிய பா ரஞ்சித்
இதனை தொடர்ந்து பெரம்பலூரில் ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் உடலை அடக்கம் செய்யக்கூடாது என திட்டமிட்டு தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் தாண்டிய நிலையில் தான் சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்து பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு நிர்ப்பந்திக்கப்பட்டது. இதற்கான காரணங்கள் என்ன என்பதையும் தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் படுகொலையை ஒட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அதற்காக மாற்று கதையை சமூக வலைதளங்களில் உள்ள சமூக நீதி காவலர்களும், சில ஊடகங்களும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அவரே ஒரு ரவுடி, ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சினையாக பார்க்க முடியும், கட்டப்பஞ்சாயத்து செய்பவர், பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என ஆளுக்கு ஆள் தீர்ப்பு எழுந்து கொண்டிருக்கிறீர்கள். கொலை நடந்த நடுக்கம் கூட இன்னும் குறைவில்லை. ஆனால் அதற்குள் இத்தனை கருத்துக்களை பேசுவதற்கு பின்னணியில் இருப்பது யார் என்ன என்பதையும் கேள்வி கேட்டிருக்கிறார்.
எங்கள் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கேள்வி கேட்பதே ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவற்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர். சிறு வயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கப்பட்டவன் நான், திரைத்துறையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு என்னை பாதுகாத்து வைத்திருந்தார்.
இப்படிப்பட்ட ஒரு அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாக நான் கருதுகிறேன் இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளும் என்னை வழிநடத்தும் என குறிப்பிட்டு இருக்கிறார். உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்காக மட்டும்தான் சமூக நீதியா? என்று ஆளும் அரசுக்கு எதிராக பா ரஞ்சித் ஏழு கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமான செய்திகள்
- 20 லட்சம் துப்பாக்கி, கூடவே சுற்றிய 50 பேர்
- ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் நடந்தது என்ன.?
- கண்மூடி திறப்பதற்குள் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலையின் முழு பின்னணி