ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

இளம் நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் பா ரஞ்சித்.. அவங்ககிட்ட அப்படி என்ன புடிச்சுதோ!

பா ரஞ்சித் தனக்கு பிடித்த நடிகர் நடிகைகள் என்றால் தொடர்ந்த அவருடைய அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுத்து தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உயர்த்தி விடுவார் என்பதை பார்த்திருக்கிறோம்.

அப்படித்தான் அட்டக்கத்தி தினேஷ், கலையரசன் போன்ற நடிகர்கள் பா ரஞ்சித்தின் பட்டறையிலிருந்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகர்களாக வலம் வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சார்பட்டா படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் இளம் நடிகை துஷாரா விஜயன்.

dhusara-vijayan-cinemapettai
dhusara-vijayan-cinemapettai

திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர் தற்போது பா ரஞ்சித்தின் பேவரிட் நடிகையாக மாறி விட்டாராம். அவருடைய நடிப்பு, முகபாவனை அனைத்தும் ரஞ்சித்துக்கு மிகவும் பிடித்து விட்டதால் அடுத்ததாக இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்திலும் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இரண்டு இளைஞர்களின் காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் நட்சத்திரம் நகர்கிறது என்ற புதிய படத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

dhusara-vijayan-cinemapettai-01
dhusara-vijayan-cinemapettai-01

சார்பட்டா பரம்பரை என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்து அந்த வெற்றியை கூட கொண்டாடாமல் அடுத்த படத்தில் கவனம் செலுத்திவரும் பா ரஞ்சித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Trending News