தமிழ் சினிமாவில் ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்கி படம் எடுப்பதும் அவர்களை மரியாதை குறைவாக நடத்துவதும் போன்ற பிரச்சினைகள் எழுந்த நிலையில் தற்போது ஒரு இனத்தைச் சேர்ந்த பாடகரை வேண்டுமென்றே மறைப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி பாடியவர் தெருக்குரல் அறிவு. மாஸ் வெற்றிபெற்ற வாத்தி ரைடு, ஆல்பம் பாடலான என்ஜாய் என்ஜாமி போன்ற பாடல்களை எழுதி பாடியவர் அறிவு.
இவரது பாடல்கள் அனைத்துமே புரட்சிகரமாக அதே சமயத்தில் எளிதாக இளைஞர்களை கவரும் வகையில் அமைவதால் பல மில்லியன் பார்வையாளர்களை யூடியூப் வட்டாரங்களில் குவித்து வருகிறது. அதிலும் என்ஜாய் என்ஜாமி பாடல் தற்போது வரை 300 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது.
சமீபத்தில் ரோலிங் ஸ்டோன் நாளிதழில் கடந்த சில வருடங்களில் சூப்பர் ஹிட் அடித்த பாடல்களில் நடித்த நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து அட்டைப்படத்தில் வெளியிட்டது. அதில் என்ஜாய் என்ஜாமி பாடும் பாடலில் பாடிய மற்றும் நடனம் ஆடிய தீ என்பவர் இடம்பெற்றிருந்தார்.
ஆனால் அதே பாடலைப் எழுதி பாடிய அறிவு இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பா ரஞ்சித் வேண்டுமென்றே அறிவு மறைக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அந்த அட்டைப் படத்தில் குறிப்பிட்டுருந்த என்ஜாய் என்ஜாமி, நீயே ஒலி பாடலையும் எழுதி பாடியவர் அறிவுதான்.
ஆனால் அவரையே அட்டைப்படத்தில் காணவில்லை என்கிற கோபத்தில் பா ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து பதிவு போட்டிருந்தார். இதுபோன்று நடப்பது ஒன்றும் முதல் முறையல்ல. பா ரஞ்சித்தின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.