சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

வாய் இருப்பதால் எது வேண்டுமானாலும் பேசக்கூடாது.. பாகிஸ்தான் வீரருக்கு இந்திய வீரர்கள் பதிலடி

பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகள் பிரிந்த காலத்திலிருந்தே இரு நாட்டிற்கும் ஒரு நல்லுறவு நீடிப்பதில்லை. இந்தியாவின் எதிரி நாடு என்றால் அது பாகிஸ்தான், அங்கேயும் அப்படித்தான், இப்படி ஒரு சூழ்நிலையில்தான் இருநாடுகளும் இருந்து வருகிறது.

இந்தப் பாகுபாடு பாகிஸ்தான் நாட்டில் உள்ள கிரிக்கெட் விளையாட்டிற்கும் பொருந்தும். இரு நாடுகளும் தற்போது விளையாடுவதையும் நிறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி மற்ற கிரிக்கெட் நாடுகளும், பாகிஸ்தான் நாட்டிற்கு விளையாட செல்வதற்கு ஒரு வகை அச்சமான சூழ்நிலையில்தான் இருக்கிறது.

Pak-Cinemapettai.jpg
Pak-Cinemapettai.jpg

துபாய் நாட்டில் 20 ஓவர் உலக கோப்பை தொடர் இம்மாதம்17ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. அதில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் கலந்து கொள்கிறது. இதுதான் இப்பொழுது ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது. எப்பொழுதும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லை நடைபெறும். இரு நாட்டு ரசிகர்களுக்கும் இந்தப் போட்டி நல்ல ஒரு விருந்தாக அமையும்.

இந்நிலையில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியால் பாகிஸ்தான் அணியை வெல்ல முடியாது. எல்லா வகையிலும் இந்தியாவை விட பாகிஸ்தான் அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர் என மார்தட்டிக் கூறுகிறார் அப்துல் ரசாக். அதுமட்டுமின்றி இந்திய அணி, பாகிஸ்தானுடன் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் தோல்வியடையும் எனவும் கூறியுள்ளார்.

Baby-Bowler-Cinemapettai.jpg
Baby-Bowler-Cinemapettai.jpg

எப்பொழுதுமே அப்துல் ரசாக்கிற்கு, இந்திய அணியை வம்பிழுத்து பார்ப்பதில் ஒரு அளவுகடந்த பிரியம். இதற்கு முன்னர் பலமுறை இந்த மாதிரி வார்த்தைகளை விட்டு வாயில் புண் பட்டு சென்றிருக்கிறார். ஒருமுறை ஜஸ்பிரித் பும்ராவை குழந்தை பவுலர் என்றும், ஹர்திக் பாண்டியாவை தம்மிடம் வந்து ட்ரெய்னிங் எடுக்குமாறும் கூறி வம்பிழுத்தார். அப்போதே இதற்கு விரேந்தர் சேவாக், கௌதம் கம்பீர் போன்ற முன்னாள் வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

Razzaq-Cinemapettai-1.jpg
Razzaq-Cinemapettai-1.jpg

இப்பொழுதும் இந்திய அணியை வம்பிழுக்கும் வகையில் அப்துல் ரசாக் பேசியுள்ளார். இதற்கு இந்திய அணியின் பல முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

- Advertisement -spot_img

Trending News