ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

இந்திய அணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தூண்டிவிடப்பட்டாரா? பாகிஸ்தானுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. முதன் முறையாக உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியுள்ளது.. இதனை பாகிஸ்தான் நாடு கொண்டாடி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 151 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை பாகிஸ்தான் அணி 18-வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி எடுத்து இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது.

Pak-Cinemapettai-2.jpg
Pak-Cinemapettai-2.jpg

போட்டி முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் நிருபர் ஒருவர் இந்திய அணியில் குழப்பம் விளைவிக்கும் மாறு, யிடம் ஒரு கேள்வி எழுப்பினார். அந்த நிருபர் கோலியிடம் 20 ஓவர் உலகக் கோப்பையில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவாரா என்ற ஒரு கேள்வி சம்பந்தமே இல்லாமல் கேட்டு ஏதோ குழப்பம் ஏற்படுத்தினார்.

அந்த கேள்வியை கேட்டு அதிர்ச்சியடைந்த விராட் கோலி, தலையில் அடித்த வாறு சிரித்துக்கொண்டு பதிலளித்தார். இது எங்களுடைய சிறந்த அணி, இந்த அணியை வைத்து எங்களுக்கு எப்படி போட்டியை வெல்ல வேண்டும் என்று தெரியும். அதுமட்டுமன்றி உங்களுக்கு குழப்பம் விளைவிக்க வேண்டுமென்றால் முன்னரே வந்து என்னிடம் சொல்லி விடுங்கள் என்று வாயடைக்கச் செய்தார்.

Rohit-Cinemapettai.jpg
Rohit-Cinemapettai.jpg

அந்த நிருபர் கேட்ட கேள்வியை வேண்டுமென்றே கேட்டாரா? அல்லது இந்திய அணிக்குள் உலக கோப்பை போட்டிகளில் குழப்பம் ஏற்படுத்த இவ்வாறு செய்தாரா என்று சர்ச்சையாக உள்ளது.

Trending News