திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

20 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் குடுமி இந்தியா கையில்.. சூப்பர் 8க்கு போனும்னா இதுதான் நிலைமை

Super 8: 20 ஓவர் உலக கோப்பை தொடரில் நான்கு பிரிவுகளாக, இருபது அணிகள் பங்கேற்றது. இதில் தகுதி சுற்றுகள் முடிவடைந்து இப்பொழுது இரண்டு பிரிவுகளாக விளையாடிக் கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் கிட்டத்தட்ட பாதி அணிகள் சூப்பர் 8 செல்வதற்கு துண்டை போட்டுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளை வீழ்த்தி கிட்டத்தட்ட சூப்பர் 8 போட்டிகளுக்கு தகுதி பெற்றுவிட்டது. இனி அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரு போட்டிகளிலும் எளிதாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பொழுது பாகிஸ்தான் சூப்பர் 8க்கு முன்னேறுவது இந்தியா கையில் தான் இருக்கிறது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளின் வெற்றியை பொருத்து பாகிஸ்தானின் கனவு இருக்கிறது. பாகிஸ்தான அணி அமெரிக்காவிடம் தோற்றது தான் இப்பொழுது அவர்களுக்கு எமனாக வந்து நிற்கிறது. கனடா அணியுடன் வெற்றி பெற்றாலும் 18 ஆவது ஓவரில் சேஸ் செய்து ரன் ரேட்டில் பின்தங்கியது.

சூப்பர் 8க்கு போனும்னா இதுதான் நிலைமை

அயர்லாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் கூட சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவது கடினம் தான். அதற்கு முக்கிய காரணம் குரூப் ஏ பிரிவில் தற்போது இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடத்தை பிடித்திருக்கிறது. கனடா மற்றும் பாகிஸ்தான் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது.

அமெரிக்க அணிஅடுத்து இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுடன் மோத வேண்டும். இதில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து அயர்லாந்தை வீழ்த்தி விட்டால் அந்த அணி எளிதாக சூப்பர் 8க்கு முன்னேறி விடும். இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் அமெரிக்காவை வீழ்த்தினால் மட்டுமே பாகிஸ்தான் சூப்பர் 8 முன்னேறும். இதுபோக இந்திய அணி விளையாடும் போட்டிகளில் அமெரிக்க அணியை அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும்

பாகிஸ்தான் அணி விளையாடும் அடுத்த போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தும் பட்சத்தில் அது அதிக ரன் ரேட் உடன் கூடிய வெற்றியாக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி அமெரிக்க அணி அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைய வேண்டும். இன்னொரு புறம் இந்திய அணி அமெரிக்காவுடன் படுதோல்வி அடைய வேண்டும். இப்படி நடக்கும் பட்சத்தில் தான் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

- Advertisement -spot_img

Trending News