உலக கிரிக்கெட் அணிகளில் நாங்கள் தலை சிறந்த அணி என பெருமை பேசிக்கொள்ளும் பாகிஸ்தான் அணி 20 ஓவர் உலகக்கோப்பைக்காக தயாராகி வருகிறது. இளம் படைகளைக் கொண்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் அந்த அணி கோப்பையை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கவிருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்காக அனைத்து நாடுகளும் தயாராகி வருகிறது. எல்லா நாடுகளும் 15 பேர் கொண்ட அணி பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் தற்போது அந்தந்த நாட்டிற்கான ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரை இந்தியா தான் நடத்தவிருக்கிறது . ஆரம்பத்தில் அனைத்து போட்டிகளிலும் இந்தியாவில் நடைபெறும் என அறிவித்திருந்தது பிசிசிஐ. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக போட்டிகள் அனைத்தும் துபாய் நாட்டில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
போட்டிகளை இந்தியா நடத்துவதால் அனைத்து நாட்டு வீரர்களின் ஜெர்சியில் இந்தியாவின் பெயர் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது பாகிஸ்தான் அணி வெளியிட்ட ஜெர்சியில் இந்தியாவின் பெயர் இருக்கும் இடத்தில் “UAE Dubai” என்று அச்சிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அச்சிடப்பட்டு வெளியிட்ட ஜெர்சியை கண்டு அனைத்து நாடுகளும் ஆச்சரியத்தில் மூழ்கியது. இது முற்றிலும் தவறான ஒரு நடைமுறை என்றும், அவ்வாறு அச்சிடப்பட்டது பாகிஸ்தான் அணியின் ஒழுக்கமற்ற செயல் எனவும், ஆரம்பத்திலே பாகிஸ்தான் அணி பிரச்சனை ஏற்படுத்துவதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.