வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாகிஸ்தான் வீரரின் உலக சாதனையை முறியடித்த இந்திய வீரர்.. அப்படி என்ன சாதனை? எப்படி தெரியுமா?

பாகிஸ்தான் வீரர் படைத்த சாதனையை வெறும் 22 நாட்களிலேயே இந்திய வீரர் முறியடித்துள்ளதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நமது அண்டை நாடாக பாகிஸ்தான் இருந்தாலும் பரஸ்பர புரிதல் இல்லாததால் அந்த நாட்டுடனான உறவை அதிகம் கவனிக்கப்படுவதில்லை. ஆனால், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி எப்படி சர்வதேச அளவில் எல்லோராலும் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறதோ, அதேபோல் தான் ஹாக்கி, செஸ், பேட்மிண்டன், தடகளம் உள்ளிட்ட போட்டிகளும் பார்க்கப்படுகிறது.

இரண்டு நாட்டைச் சேர்ந்த வீரர்களில் யார் ஜெயிப்பது என்ற ஆர்வம் தாங்களே அந்த விளையாட்டை விளையாடுகின்ற உணர்வை நம் ஒவ்வொருவருக்கும் கடத்தி விடும் இயல்பும், இந்தியா – பாகிஸ்தான் விளையாடும் போது தங்கள் நாட்டு அணிதான் ஜெயிக்க வேண்டும் என்ற உணர்வும் ஒவ்வொருவருக்கும் ஏற்படும்.

அப்படியொரு போட்டியில் பாகிஸ்தான் வீரரின் சாதனையை இந்திய வீரர் முறியடித்துள்ளார். அதாவது, இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹ்தாஸ், டன் ஒற்றை காலால் ஸ்டேண்டிங் புஸ் அப்ஸ் எடுப்பதில் பாகிஸ்தான் வீரின் சாதனையை முறியடித்துள்ளார்.

ரோஹ்தாஸ் தன் முதுகில் 27875 கிலோ எடையைச் சுமந்தபடி, 704 புஷ் அப்ஸ் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் 27.200 கிலோ எடையுடன் 534 புஷ்– அப்ஸ் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில், இந்தியாவைச் சேர்ந்த ரோஹ்தாஸ், அவரைவிட கூடுதலாக 675 கிலோ கிராம் எடை அதிகமாக வைத்து, புஷ் அப்ஸ் அப்ஸ் எடுத்து இச்சாதனை படைத்துள்ளார்.

புது உலகச் சாதனை படைத்த இந்திய வீரர் ரோஹ்தாஸ்

இந்த சாதனை பற்றி இந்திய வீரர் ரோஹ்தாஸ் தெரிவித்ததாவது: இதற்கான நான் நாள்தோறும் 4 மணி நேரம் பயிற்சி எடுத்து வந்தேன். எனவே பாகிஸ்தான் வீரரின் அந்த சாதனையை முறியடிக்க நான் முயற்சி செய்தென். அதன்படி, இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினேன். இது ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது ஆகும். மேலும், அதிக சந்தோசத்தில் இருக்கும் நான் பாகிஸ்தான் வீரரின் சாதனையை வெறும் 22 நாட்களில் முறியடித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Trending News