டிரம்ப் மகள் நான் தான்.. பாகிஸ்தான் வீட்டிலேயே வேலையை காட்டி இருக்கார், நெட்டிசன்கள் கிண்டல்

donalad trump
donalad trump

அமெரிக்க தேர்தல் முடிவுகள் பல்வேறு தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் தேர்வாகியுள்ள நிலையில், தேர்தல் வெற்றி எப்படி சாத்தியமானது? வெற்றிக்காக இவர் வகுத்த வியூகங்கள் என்ன? இப்படி பல விவாதங்கள் நடந்து வருகிறது.

ஆனால் இதையெல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு ஒரு ப்ரளயத்தையே கிளப்பியுள்ளார் ஒரு பாகிஸ்தானிய பெண். இளம்பெண் ஒருவர், தன்னை ட்ரம்பின் உண்மையான மகள் என்று கோரியதே தற்போது ஹாட் டாபிக் ஆக உள்ளது.

இது குறித்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த அந்த இளம்பெண், “”எனது தந்தை ட்ரம்ப் மிகவும் கடினமானவர். என்னை சரியாக பார்த்துக்கொள்ளவில்லை என்று, தாய் இவானாவை அவர் எப்போதும் கடிந்துக்கொண்டே இருப்பார். இவானா மிகவும் கவனக்குறைவாக இருக்கிறாய்.

“என் மகளை உன்னால் கவனிக்க முடியாது என்றும் திட்டிக்கொண்டிருப்பார். வெளிநாட்டினர் இங்கு வந்து என்னை பார்த்துவிட்டு போகிறார்கள். நான் இங்கு என்ன செய்துக்கொண்டிருக்கிறேன் என ஆதங்கப்படுகிறார்கள். நான் எனது தந்தையை சந்திக்க அமெரிக்கா செல்ல இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

பொதுவாக இம்மாதிரியான பிரச்சனை சினிமா செலிபிரிட்டிகளுக்கு அவ்வப்போது வருவது வாடிக்கையான விஷயம் தான். ஆனால் இந்த முறை இதில் சிக்கியது, அமெரிக்க அதிபர். இந்த நிலையில் பலர், இத்தனை நாள் எங்கு இருந்தீர்கள்? இப்போது அவர் ஜெயித்த பின் இதை ஏன் சொல்லுகிறீர்கள்.

அதுமட்டுமின்றி, அவர் மகளுக்கு பாகிஸ்தானில் என்ன வேலை என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் நெட்டிசன்கள், “தாத்தா பாகிஸ்தான் வீட்டிலேயே தனது வாலிப வேலைகளை காட்டி இருக்கிறார் பார்..” என்று நக்கல் செய்து வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner