சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

இந்திய வீரர்களை தரக்குறைவாக பேசிய பாகிஸ்தான் வீரர்.. போய் பெரியவர்களை கூட்டிட்டு வாங்க என கலாய்த்த ரசிகர்கள்

இந்திய வீரர்களை வம்புக்கு இழுப்பது என்றால் எப்பொழுதுமே அவருக்கு கொள்ளை பிரியம். வாயைக் கொடுத்து வாயில் புன்னோடு தான் போவார். பாகிஸ்தானை சேர்ந்த ஆல்ரவுண்டர் அவர். ஒருமுறை இந்திய வீரர்களுக்கு பயிற்சி வேண்டும் என்றால் தான் வந்து பயிற்சி அளிக்க தயார் என்று வெளிப்படையாக சொல்லி இந்தியர்களை வம்பு இழுத்தார்.

இந்திய கிரிக்கெட் அணியை விட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உயர்ந்தது என்றும், இந்தியர்களை விட பாகிஸ்தான் பிளேயர்ஸ் திறமை வாய்ந்தவர்கள் என்றும் அடிக்கடி சோசியல் மீடியாவில் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார்.

அவர்தான் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இவர்களில் சிறந்த வீரரை தேர்வு செய்யுமாறு ஒரு நேர்காணலில் கேட்டபோது முதலில் நாம் பாபர் அசாம்ஐ விராட்கோலியோடு ஒப்பீடு செய்யக்கூடாது பாகிஸ்தான் அணி வீரர்கள் எப்பொழுதுமே இந்திய வீரர்களை விட திறமையானவர்கள் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வரலாற்றைப் பார்த்தால் இன்சமாம் உல் ஹக், சையத் அன்வர், ஜாவித் மியாண்ட போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர், அவர்களுடன் எவரையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

abdul-pandiya
abdul-pandiya

ஒரு காலத்தில் இவர்கள் இந்திய அணியை ஆதிக்கம் செய்தனர். இவர்கள் ஆடும் காலத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் நிறைய தோல்விகளை தழுவியது என்று பேசியுள்ளார். ஒருமுறை ஹர்திக் பாண்டியாவிற்கு டெக்னிக் சரியில்லை, அவரை நான் சிறந்த ஆல்-ரவுண்டராக மாற்றுகிறேன் தன்னிடம் வந்து பயிற்சி எடுத்துக் கொள்ளுமாறு வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

அதைப் போன்று இப்பொழுதும் இந்தியர்களை விட பாகிஸ்தான் வீரர்கள் திறமை மிக்கவர்கள் என்று வம்புக்கு இழுத்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் போய் பெரியவர்களை கூட்டிட்டு வாங்க தம்பி என தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Trending News