திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரபல நடிகரை பதம் பார்க்க தயாரான பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. நெட்டிசன்கள் பேச்சுக்கு பதிலடி

சமீப காலங்களில் வெள்ளித்திரை நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு தனி மவுசு உருவாகியுள்ளது. அவர்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் அப்லோட் செய்யும் புகைப்படங்கள், சீரியல்களில் ஷூட்டிங்கின் போது எடுக்கப்படும் காட்சிகள், இவர்களது சொந்த, சோக பிரச்சனைகள் அனைத்தும் ரசிகர்களை தங்கள் பக்கம் திருப்பும் முயற்சியில் உள்ளது.

அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர், பிரபல நடிகரை பதம் பார்க்க ஆசை என வெளிப்படையாக தெரிவித்துள்ளது தான் தற்போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் பல நடிகைகள் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் ராதிகாவும், பாக்கியலட்சுமியும் ஒரே வீட்டில் இருந்து சக்காளத்தி சண்டைப் போட்டு வருகின்றனர்.

Also Read: எம்ஜிஆர் முதல் அம்பி வரை.. பாக்கியலட்சுமி கோபி கலக்கிய விதவித கெட்டப்

அதிலும் சமீபத்தில் வந்த ப்ரோமோவில் ராதிகாவின் கழுத்தைப் பிடித்து வீட்டை விட்டு துரத்தும் ஈஸ்வரியை ராதிகாவின் அம்மா போலீசை வரவழைத்து பஞ்சாயத்து செய்கிறார். அப்போது பெண் காவலர் பாக்கியலட்சுமியை பார்த்து உங்களுக்கு தான் விவாகரத்து ஆகிவிட்டதே, நீங்கள் ஏன் இங்கு இருக்குறீர்கள் என கேள்வி கேட்டு, முழுக்க முழுக்க ராதிகாவின் உரிமை தான் இந்த வீடு என கூறுகிறார். இதை கேட்டு ராதிகா வீட்டிற்குள் வெற்றிநடைப்போடும் வகையில் இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.

இப்படி ஒவ்வொரு வாரமும் பல திருப்பங்களோடு பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது இந்த சீரியலில் நடித்த பிரபலம் பாலிவுட் நடிகரை பதம் பார்க்க ஆசை என கூறியது தான் பெரும் பேச்சாக உள்ளது. பாக்கியலட்சுமி சீரியலின் மூலமாக தனது கேரியரை நிலை நிறுத்திக்கொண்ட நடிகை ரேஷ்மா பசுப்புலெட்டி ராதிகா கதாபாத்திரத்தில் கச்சிதமாய் பொருந்தியுள்ளார்.

Also Read: சீரியலில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் 2வது திருமணம்.. பாக்கியலட்சுமி பிரபலம் செய்த மானங்கெட்ட விவாகரத்து

இவர் இரண்டு முறை திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்தான நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன் ஒருவர், நான் உங்களை பதம் பார்க்க வேண்டும் என கமெண்டில் பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த ரேஷ்மா மிகவும் கூலாக ஒரு பதிலடியை கூறியுள்ளார். அதில் எனக்கும் கூட பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூரை பதம் பார்க்க ஆசை, ஆனால் என்ன செய்வது அது முடியாத ஒன்று என தெரிவித்துள்ளார். இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள் ரேஷ்மாவை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். மேலும் இவ்வளவு ஓபனாக எந்த ஒரு நடிகையும், ஒரு நடிகரை பதம் பார்க்க வேண்டும் என கூறமாட்டார் என்றும் அவரை நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.

Also Read: கோலாகலமாக நடந்த 8 ஆம் ஆண்டு விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்.. பாக்கியலட்சுமி சீரியலுக்கு இத்தனை விருதுகளா?

Trending News