வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

தமிழகத்தின் நிரந்தர முதல்வர்.. திருப்பூர் ஆலோசனை கூட்டத்திற்கு மாஸ் என்ட்ரி கொடுத்த பழனிச்சாமி!

தமிழகத்தில் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவரது நலத்திட்டங்களால் தற்போது தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது.

மேலும் தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்வதோடு மட்டுமில்லாமல், தொடர்ந்து அடுத்ததாக புதிய நலத் திட்டங்களை அறிவித்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளார்.

சமீபத்தில்கூட முதல்வர் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்று அறிவித்ததோடு 10 நாட்களுக்குள் வேளாண் கடன் ரத்து செய்யப்பட்டது ரசீது வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து விவசாயிகளின் மீளா துயரத்தை தீர்த்தார்.

தற்போது விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் திட்டமும் தொடங்கி முதல்வரால் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது திருப்பூர் சென்ற முதல்வர் எடப்பாடியாருக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டதாகவும், எடப்பாடியார் மாஸாக என்ட்ரி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

admk-edappadi-jayakumar
admk-edappadi-jayakumar

அதாவது திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு முதல்வர் கூட்டத்தின் நடுவில் பயங்கரமாக என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Trending News