வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

புருஷன் முன்னாடியே காதலை சொன்ன பழனிச்சாமி.. அதிர்ச்சியில் கோபிக்கு வந்த நெஞ்சுவலி

Bhaagiyalakshmi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் பெண்களை வளர்ச்சி நோக்கில் கொண்டு செல்லும் விதமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது சமையல் ஆர்டரை எடுத்து வெற்றிகரமாக பாக்யா தொழில் நடத்தி வருகிறார். அதோடு தனது மகளை பெரிய கல்லூரி ஒன்றில் அவள் விருப்பபடி படிக்க வைக்கிறார்.

இந்த சூழலில் பாக்யாவுக்கு தானும் படித்து பட்டம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இதன் காரணமாக இனியா படிக்கும் கல்லூரியிலேயே பாக்யாவும் படிக்க இருக்கிறார். இந்த விஷயம் கோபிக்கு தெரிய வர மிகவும் டென்ஷன் ஆகிறார். அதோடு மட்டுமல்லாமல் ராதிகாவிடம் இதை சொல்லி புலம்பி தவிக்கிறார்.

Also Read : தொடர்ந்து 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் கிளைமாக்ஸ் காட்சி.. டிஆர்பி இல்லாததால் ஊத்தி  மூட போகும் விஜய் டிவி

ஆனால் ராதிகா பாக்கியாவால் இதெல்லாம் முடியாது, ரெண்டு நாளில் அவங்களாலேயே முடியாது என்று சொல்லி வந்து விடுவார்கள் என்று கூறிவிட்டு போகிறார். இது ஒருபுறம் இருக்க பாக்யா ஆங்கிலம் கற்று வருகிறார். அங்கு பாக்யாவின் முன்னிலையில் பழனிச்சாமி ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசி காண்பிக்கிறார்.

அந்தச் சமயத்தில் எதர்ச்சியாக கோபி அங்கு வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பாக்யா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஐ லவ் யூ என்று ஆங்கிலத்தில் பழனிச்சாமி பாக்யா புருஷன் கோபி முன்னிலையில் இருக்கும் போதே கூறிவிடுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்து கோபிக்கு நெஞ்சு வலியே வந்து விடுகிறது.

Also Read : டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூடும் விஜய் டிவியின் நிகழ்ச்சி.. பட்ட அசிங்கம் எல்லாம் போதும்

மேலும் பாக்யாவின் அருமை கோபிக்கு புரிய வைக்க பழனிச்சாமி இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். ஆனால் பாக்யாவின் வளர்ச்சியை பார்த்து பொறாமை பட்டுக் கொண்டிருக்கும் கோபி இப்போது பழனிச்சாமி உடன் பழகி வருவதால் மேலும் எரிச்சல் அடைகிறார்.  புருஷன் முன்னாடியே பொண்டாட்டிக்கு காதலை சொன்னது ரொம்ப ஓவர் தான்.

ஆனாலும் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போவோம் என பழனிச்சாமி எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார். இதனால் கோபி அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற சுவாரசியமான கதை களத்துடன் பாக்கியலட்சுமி தொடர் சென்று கொண்டிருக்கிறது. அதோடு இந்த தொடரின் சுவாரஸ்யமும் இப்பொழுது கூடுதலாகி உள்ளது.

Also Read : விஜய் டிவி 8 சீரியல் நடிகைகளின் சம்பளத்தை கேட்டா தல சுத்துது.. முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்

Trending News