விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரை இப்போது கழுவி ஊற்றாத ரசிகர்கள் இல்லை என்ற அளவுக்கு தான் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இப்போது கோபியால் ராதிகா கர்ப்பமாகி இருக்கிறார்.
இந்த விஷயம் பாக்யாவுக்கு தெரிந்த நிலையில் ராதிகாவுக்கு வாழ்த்து கூறிவிட்டு செல்கிறார். இது ஒரு புறம் இருக்க பாக்யாவை கரெக்ட் செய்வதற்காக பழனிச்சாமி ஆளே மாறி இருக்கிறார். காலம் போன கடைசியில் இதெல்லாம் தேவையா பழனி சார் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
அதாவது பாக்யாவுக்கு மூன்று பசங்கள் உள்ளனர். அதில் மூத்த மகனுக்கு குழந்தையும் பிறந்து விட்டது. பாக்யாவின் மகள் இனியாவிற்கும் மாப்பிள்ளை பார்த்து வருகிறார்கள். இந்த சூழலில் பாக்யா இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறி தான்.
பாக்யாவுக்காக மொத்தமாக மாறிய பழனிச்சாமி
கோபி மட்டும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், பாக்யா செய்யக்கூடாதா என்று பலரும் கேட்கலாம். ஆனால் குடும்பத்தை பற்றி யோசிக்காமல் சுயநலத்திற்காக மட்டுமே கோபி இந்த காரியத்தை செய்தார்.
ஆனால் பாக்யா இந்த தவறை ஒருபோதும் செய்ய மாட்டார். ஆனால் பழனிச்சாமி இப்போது டீசர்ட் அணிந்து 90களில் உள்ளது போல் இப்போது இருக்கிறார். அதுவும் பழனிச்சாமியை பார்த்த அவரது அம்மா யாரு இது என்று கிண்டலாக கேட்கிறார்.
இந்த வயதில் பொம்பள சோக்கு கேக்குதா என்று தான் ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ் இருக்கிறது. பழனிச்சாமி பக்கம் நியாயம் இருந்தாலும் வயதிற்கு ஏற்ற வேலையை பார்த்தால் நன்றாக இருக்கும், பாக்கியாவுக்கே இதில் சம்மதம் இல்லாத போது இது தேவையில்லாத வேலை தான்.