வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பாண்டியன் பார்த்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்த பழனிவேல்.. கல்யாணத்தை நிறுத்த சதி செய்யும் சக்திவேல்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுக்கு பொண்ணு பார்ப்பதற்கு பாண்டியன் குடும்பத்தோடு கிளம்பி விட்டார். ஆனாலும் பழனிவேலுக்கு தன்னுடைய அம்மா வரவில்லை என்ற ஒரு கவலை இருக்கிறது. அதனால் வாசலுக்கு வந்ததும் அம்மாவை பார்த்து பேசி வாழ்த்து வாங்கிக் கொள்கிறார். அத்துடன் சக்திவேலின் மனைவி, என் கொழுந்தனுக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைங்க.

நல்ல பொண்ணாவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று கோமதி காது பட கத்தி பேசுகிறார். கோமதியும் அண்ணி என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு தலையாட்டி விடுகிறார். அதன்படி பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் பொண்ணு வீட்டிற்கு போய்விட்டார்கள்.

அங்கே போனதும் பாண்டியன் மூன்று மகன்களையும் மருமகள்களையும் அறிமுகப்படுத்தி மகள் அரசி மற்றும் மனைவி கோமதி என அனைவருக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இவன் தான் என்னுடைய மச்சான், மச்சான் என்று சொல்வதை விட இவனும் எனக்கு ஒரு மகன் மாதிரி தான் என்று சென்டிமென்ட் ஆக பேச ஆரம்பித்து விட்டார்.

இதையெல்லாம் கேட்ட பழனிவேலு, கதிர் மற்றும் செந்தில் இடம் மச்சான் எவ்வளவு பொய் பேசுறாரு. பெத்த பிள்ளைகளே மகன்கள் மாதிரி நடத்த மாட்டார். இதுல என்ன வேற மகன் மாதிரி நினைக்கிறாரு என்று சொல்லி நக்கல் அடித்துக் கொள்கிறார்கள். அடுத்ததாக எல்லாம் பேசி முடித்து நிலையில் பொண்ணு வந்து பழனிவேலுவை பார்க்கிறது.

இரண்டு பேருக்கும் பிடித்த நிலையில் தனியாக பேச வேண்டும் என்று சொல்லியதும் பழனிவேல் எழுந்திருத்து பேச போய்விட்டார். அந்த வகையில் பழனி அந்த பெண்ணும் தனியாக பேசிக் கொள்கிறார்கள். ரொம்ப நேரம் ஆகியும் பேசிக்கொண்டே இருப்பதால் இரண்டு பேருக்கும் பிடித்துப் போய்விட்டது என்று பாண்டியன் விட்டு மருமகள் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

அதன்படி இரண்டு குடும்பமும் கல்யாணத்திற்கு தயாராகி நிலையில் பாண்டியன் வீட்டிற்கு வந்து அந்த தகவலை சக்திவேல் மற்றும் முத்துவேல் இடம் கத்தி சொல்கிறார். அத்துடன் யார் வேண்டுமானாலும் கல்யாணத்துக்கு வரலாம். ஆனால் முடிவு நான் மட்டும்தான் எடுப்பேன் என்று சொல்லி சக்திவேலை சீண்டி விட்டார்.

அந்த வகையில் சக்திவேல், பாண்டியனை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு ஏதாவது குளறுபடி பண்ண வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பழனிவேலு கல்யாணத்தில் ஏதாவது பிரச்சனை பண்ண வேண்டும் என்று குமரவேலு பிளான் பண்ணும் பொழுது அதற்கு ஏற்ற மாதிரி அரசி கழுத்தில் பழனிவேலு தாலி கட்டி விடுவார்.

Trending News