Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் பழனிவேலுக்காக ஏற்பாடு பண்ணிய கல்யாணத்தை சக்திவேல் மற்றும் முத்துவேல் பிளான் பண்ணி கெடுத்து விட்டார்கள். அதனால் மண்டபத்தில் பழனிவேலு தலை குனிந்து நிற்கும்படி நிலைமை ஆகிவிட்டது. தான் பார்த்து வைத்த ரெண்டு பெண்ணுமே இப்படி பாதியிலேயே போய் விட்டார்கள் என்று பாண்டியனும் மண்டபத்தில் புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
அத்துடன் கோமதி பயந்த மாதிரி இந்த கல்யாணம் நடக்காமல் நின்று போய்விட்டதே என்று தம்பியை நினைத்து வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் நான் சாகுவதற்குள் என் மகனின் கல்யாணத்தை பார்க்கணும் என்று ஆசைப்பட்டேன். அது கடைசி வரை நடக்காமல் போய்விடுமோ என்று பழனிவேலுவின் அம்மாவும் கண்ணீர் விட்டு கதற ஆரம்பித்து விட்டார்.
இப்படி கல்யாண மண்டபமே கண்ணீர் மண்டபமாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் சக்திவேல் முத்துவேல் மற்றும் குமரவேலு மண்டபத்திற்குள் நுழைந்து நாங்கள் இருக்கிறோம். என் தம்பிக்கு நாங்கள் பார்த்து வைத்த பெண்ணை கட்டி வைப்போம் என்று சொல்லி சுகன்யா என்ற ஒரு பெண்ணை கூட்டிட்டு வருகிறார். இந்த பொண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மாதத்திற்குள் கணவர் இறந்து விட்டதால் தனிமையில் தான் இருக்கிறார்.
அதனால் உனக்கு இந்த பொண்ணு எல்லா விதத்திலும் சரியாக இருக்கும் கட்டிக் கொள் என்று முத்துவேல் மற்றும் சக்திவேல் சொல்கிறார்கள். உடனே பழனிவேலுவின் அம்மா பழனிவேலுவை கல்யாணம் பண்ண சொல்லி வற்புறுத்துகிறார். அப்பொழுது பாண்டியனும் ஓகே கல்யாணம் பண்ணு என்று சொல்லிய நிலையில் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்து விடுகிறார்.
அந்த வகையில் சக்திவேல் மற்றும் முத்துவேல் போட்ட பிளான் படி பழனிவேலு கல்யாணம் நடந்து முடிகிறது. இவ்வளவு தூரம் மச்சான்கள் சதி பண்ணுவதற்கு காரணம் பாண்டியனை தோற்கடித்து அவமானப்படுத்த வேண்டும் என்பதற்குத்தான். அதுவும் நடந்து விட்ட நிலையில் சக்திவேல் மற்றும் முத்துவேல் ரொம்பவே நிம்மதியாகி விட்டார்கள்.
ஆனால் இதற்கெல்லாம் ஒரு விதத்தில் கோமதியும் தான் காரணம். அண்ணன்களின் கௌரவத்தையும் மரியாதையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ராஜி கதிர் கல்யாணத்தை நடத்தி வைத்தார். அந்த கோபத்தின் மொத்த வெளிப்பாடாகத்தான் முத்துவேலு பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்கு துணிந்து விட்டார். அன்றைக்கு கோமதி மட்டும் அந்த முடிவு எடுக்கவில்லை என்றால் பாண்டியன் குடும்பத்தில் இந்த ஒரு அவமானம் நடந்திருக்க வாய்ப்பே இருக்காது.