செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி வசூலை தாண்டிய 3 படங்கள்.. அதிரடி காட்டிய ரஜினி

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகிறது என்றால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். அதேபோல் அவர்களின் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் அதை வைத்து தான் நடிகர்களின் சம்பளம் அடுத்தடுத்த படங்களில் முடிவு செய்யப்படும். அந்த வகையில் தென்னிந்திய திரைப்படங்களில் 300 கோடி வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

பிரபாஸ் : தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் பிரபாஸுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் அவர் நடித்த பாகுபலி திரைப்படம். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் 580 கோடி வசூல் சாதனை செய்தது.

பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி 2 வெளியானது. பல எதிர்பார்ப்புகளுடன் வந்த பாகுபலி 2 படம், இந்தியா முழுவதும் 1752 கோடி வசூலை வாரி குவித்தது. இதேபோல் சுஜித் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் 2019 இல் வெளியான சாஹோ படம் 451 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

ரஜினிகாந்த் : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடம் பிடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய திரைப்படங்கள் வெளியாகிறது என்றாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள். ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தில் ரஜினிகாந்த் டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 300 கோடி வசூல் சாதனை செய்தது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 படம் 2018 ல் வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபீஸில் 662 கோடி வசூல் செய்தது. பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து 2016 இல் வெளியான திரைப்படம் கபாலி. இந்தியா முழுவதும் இப்படம் 477 கோடி வசூல் செய்தது.

அல்லு அர்ஜுன் : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். அண்மையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தண்ணா நடித்திருந்தார். ஐந்து மொழிகளில் வெளியான புஷ்பா படம் 306 கோடி வசூல் செய்துள்ளது.

- Advertisement -spot_img

Trending News