ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

பஞ்சதந்திரம் 2.. பிரபல நடிகர் போட்ட ட்வீட்

சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் இயக்குனர்களின் படங்களில் சில படங்கள் வெற்றியும் சில படங்கள் தோல்வியுமாக இருந்துதான் வருகிறது. இருந்தாலும் இரண்டாம் பாகம் எடுப்பதால் லோ பட்ஜெட் படமாக இருக்கும். அப்படியிருந்தால் நட்டமே ஏற்பட்டாலும் ஓரளவு தாங்கக்கூடிய அளவு கஷ்டமாகத்தான் இருக்கும். அதனால் பழைய படங்களை தூசு தட்டி இரண்டாம் பாகமாக எடுத்து வெளியிட பலர் ஆர்வமாக உள்ளார்கள்.

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் பஞ்சதந்திரம். இந்த படத்தில் கமல் சிம்ரன் ரம்யா கிருஷ்ணன் ஜெயராம் யூகிசேது ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள் நடித்து மிகப்பெரிய வெற்றியை உண்டாக்கியது. இப்படிப்பட்ட முழு நேர நகைச்சுவை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்காமல் இருப்பது தயாரிப்பாளருக்கு வருத்தம்தான்.

பஞ்சதந்திரம் படத்தின் காமெடி களில் ஒருவராக நடித்த ஸ்ரீமனிடம் ரசிகர்கள் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவருமா என்று கேள்வி கேட்டு தினமும் தொந்தரவு செய்கிறார்களாம். இதனால் கடுப்பான ஸ்ரீமன் ஒரு அதிரடியான பதில் சொல்லிவிட்டார்.

இதுபற்றி அவர் கூறியதாவது பஞ்ச தந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் நடிகர் கமலஹாசன் மனது வைத்தால் மட்டுமே நடக்கும் எனவும், மற்றபடி படக்குழுவினருக்கு அனைவரும் அந்த படத்தை எடுக்க ஆர்வமாக தான் உள்ளார்கள் எனவும் கூறி இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

panchathandiram-cinemapettai
panchathandiram-cinemapettai

ஏற்கனவே கமலை நம்பி பணம் போட்ட 10 படங்கள் காற்று வாங்கிக் கொண்டு வருகிறது. இதில் அடுத்து இரண்டாவது பாகம் என்று ரசிகர்களும் கேலி செய்து வருகின்றனர். முதலில் ஆரம்பித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து முடியட்டும் அதன் பின் அடுத்த படத்தை பார்க்கலாம் என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.

Trending News