வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மகளின் லட்சணத்தை தெரிந்த பின் மூன்று மருமகளை கொண்டாடும் பாண்டியன்.. கவசமாக இருக்கும் மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் மொட்டை மாடியில் வைத்து உளறினாலும் மீனா மற்றும் ராஜிடம் எப்படியாவது பேசி சமாளித்து விடலாம் என்று பாக்கியம் பொய் சொல்லி சமாளிக்கிறார். ஆனால் முழுசா நினச்சதுக்கு பிறகு முக்காடு எதுக்கு என்ற நினைப்பில் தங்கமயில் அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார்.

அதாவது எங்க அப்பா பிசினஸ்மேன் கிடையாது, எங்களிடம் பணம் வசதியும் இல்லை. ஆனாலும் என்னை கட்டிக் கொடுத்தால்தான் என்னுடைய தங்கைக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்பதால் பொய் சொல்லி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தோம். ஆனால் எனக்கு வயசு ஆகிக் கொண்டே போனதால் வேறு வழி இல்லாமல் 80 சவரன் நகை தருகிறோம் என்று பொய் சொல்லி கவரிங் நகையை கொடுத்து எனக்கு கல்யாணத்தை பண்ணி வைத்து விட்டார்கள்.

ஆனால் கல்யாணம் ஆன ஒவ்வொரு நொடியும் நிம்மதி இல்லாமல் ஒரு பயத்துடனே நான் வாழ்ந்து வருகிறேன். இப்பொழுதும் அதே பயத்தில் தான் நான் இருக்கிறேன். அதற்காக நான் உங்களிடம் உண்மையை சொல்லாதீர்கள் என்று கேட்கப் போவதில்லை. உங்களுக்கு என்ன தோணுதோ அதை செய்யுங்க என்று தங்கமயில், மீனா மற்றும் ராஜிடம் சொல்கிறார்.

ஆனால் தங்கமயிலின் அம்மா அப்பா, என் மகள் வாழ்க்கை உங்களுடைய கையில் தான் இருக்கிறது. உண்மை இப்பொழுது தெரிந்து விட்டால் என் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்று கெஞ்சுகிறார்கள். உடனே மீனா மற்றும் ராஜி நாங்கள் யாரும் உண்மையை சொல்ல மாட்டோம். ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மிகப் பெரிய பிரச்சனையாகும்.

நம்ம குடும்பம் பற்றி உங்களுக்கு நன்றாகவே தெரியும் மாமா நகைக்கும் பணத்திற்கும் ஆசைப்படுறவங்க கிடையாது. அதனால் நீங்களே உங்களுடைய நிலைமை மற்றும் விஷயத்தை போட்டு உடைத்தால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை வருவதை தடுக்கலாம் என்று மீனா ராஜி அட்வைஸ் பண்ணுகிறார்கள். ஆனாலும் தற்போது நடக்க போற பங்ஷனை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் முடிக்கலாம் என்று மீனா சொல்லி விடுகிறார்.

அதன்படி தாலி பெருக்கு பங்க்ஷனும் நல்லபடியாக முடிந்து விட்டது. அந்த வகையில் ராஜியை பார்க்க வேண்டும் என்று அப்பத்தா, வடிவு வாசலில் நின்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை பார்த்த தங்கமயில், நல்ல மனதுடன் ராஜியிடம் போய் சொல்கிறார். உன்னை பார்ப்பதற்காக ரொம்ப நேரம் உங்க வீட்டில் இருப்பவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ போய் வாசலில் நின்னு அவங்க மனதார உன்னை பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்கிறார்.

உடனே கதிர், ராஜியை கூட்டிட்டு வாசலுக்கு போகிறார். அங்கே அப்பத்தா மற்றும் வடிவு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் முத்துவேலு வந்து விடுவதால் வடிவு உள்ளே போய்விடுகிறார். இருந்தாலும் முத்துவேல் மகளின் மீது இருக்கும் பாசத்தால் அம்மாவை தடுக்கவில்லை. அத்துடன் முத்துவேலின் மனதில் ஒரு மாற்றம் ஏற்படுவது போல் ராஜி மீது பாசத்தை மறைத்து வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

இதற்கிடையில் பாண்டியனுக்கு, மருமகன் ஏன் இந்த ஃபங்ஷனுக்கு வரவில்லை என்று ஒரு சந்தேகம். அதனால் இந்த பங்க்ஷனை முடித்துவிட்டு குழலி புகுந்த வீட்டுக்குப் போகிறார். அங்கே போனதும் மாமனார், மாமியார் மற்றும் கணவர் அனைவரும் குழலியே ஆவலாதி சொல்கிறார்கள். அதாவது நாங்கள் யாரும் எதுவும் செய்யவில்லை உங்கள் மகள் தான் எங்களை கொடுமைப்படுத்தி குழந்தைகளை கவனிக்காமல் அலட்சியப்படுத்துகிறார் என்ற உண்மையை சொல்கிறார்கள்.

இதைக் கேட்டதும் வீட்டிற்கு வந்த பாண்டியன், குழலிடம் கேள்வி கேட்கிறார். ஆனால் குழலி எதுவும் பதில் சொல்லாமல் எழுந்து போய்விடுகிறார். உடனே பாண்டியன், கோமதி இடம் தனியாக இருக்கும் பொழுது மனசு விட்டு பேசுகிறார். அதாவது தான் வளர்த்த பொண்ணு புகுந்த வீட்டில் அவ்ளோ பிரச்சனை பண்ணுகிறார். ஆனாலும் அங்கிருந்து ஒரு விஷயம் கூட வெளிவரவில்லை.

ஆனால் நம்ம வீட்டிற்கு வந்திருக்கும் மருமகள் மூன்று பேரும் தங்கம். இருந்தாலும் நான் சின்ன விஷயத்தை கூட பெருசாக பேசி அவர்களை நோகடிக்கிறேன் என்று ஃபீல் பண்ணி பேசுகிறார். அந்த வகையில் மகளின் லட்சணத்தை தெரிந்த பிறகுதான் மருமகள்களின் அருமை புரிகிறது. அதற்கும் முக்கிய காரணம் இந்த வீட்டிற்கு முதலாவதாக வந்த மருமகள் மீனா தான். மீனாதான் இந்த பாண்டியன் குடும்பத்திற்கு கவசமாக இருந்து ஒற்றுமையை கடைப்பிடிக்கிறார்.

Trending News