வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

குலசாமி கோவிலுக்கு குடும்பத்துடன் போகும் பாண்டியன் குடும்பம்.. அசம்பாவிதத்தை ஏற்படுத்த போகும் குமரவேலு

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஒட்டுமொத்த சந்தோஷத்தில் பாண்டியன் தலைகால் புரியாமல் இருக்கிறார். ஏனென்றால் தனக்கென்று ஒரு சொந்த பந்தம் கிடையாது, தான் ஒரு அனாதை என்று பேச்சுக்கு ஆளான பாண்டியன் தற்போது மூன்று மகன்கள் மருமகள்கள் என்று குடும்பமாக ஒற்றுமையாக நிற்பதை பார்த்து பூரித்துப் போய் நிற்கிறார்.

அந்த சந்தோஷத்தில் மருமகள் அனைவருக்கும் ஒன்று போல புடவை எடுத்து பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தி முடித்து விட்டார்கள். அத்துடன் போட்டோ எடுப்பவரை வீட்டிற்கு வரவழைத்து ஜோடி ஜோடியாக போட்டோக்களையும் எடுத்து சந்தோஷப்பட்டு கொள்கிறார். இதையெல்லாம் பார்த்து கடுப்பான சக்திவேல், இந்த பாண்டியன் முகத்தில் கரியை பூச வேண்டும் என்றுதான் பழனிவேலுவுக்கு எப்படியாவது நாம் கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்று நினைத்தோம்.

ஆனால் இந்த பழனிவேலு எதுக்கும் சரிப்பட்டு வராமல் பாண்டியன் குடும்பம் தான் முக்கியம் என்று போய்விட்டான் என புலம்புகிறார். ஆனால் இது எல்லாம் சரி செய்யும் விதமாக குமரவேலு கல்யாணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று குடும்பத்தில் இருப்பவர்களிடம் சக்திவேல் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் ஒன்றாக சேர்ந்து பொங்கல் சாப்பிட்டு சந்தோஷமாக சிரித்து பேசி கொள்கிறார்கள்.

அப்பொழுது பாண்டியன் ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கிறது என்று ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் முன் ஒரு விஷயத்தை சொல்கிறார். அதாவது இதுவரை எனக்கு என்று குடும்பமும் குலசாமியும் யார் எது என்று தெரியாமல் இருந்தேன். ஆனால் இப்பொழுது எல்லாம் கைக்கூடி வந்துவிட்டது என்று சொல்வதற்கு ஏற்ப, எனக்கு மானாமதுரையில சொந்த பந்தங்கள் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.

எனக்கு அங்குதான் குலசாமி கோயிலும் இருக்கிறது. நாளை அங்கே எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைக்க போகிறார்கள். என்னையும் எங்க அக்கா கூப்பிட்டு இருக்காங்க. நம் குடும்பத்துடன் சேர்ந்து நாளைக்கு குலசாமி கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் வெளிக்காட்டி பேசுகிறார். பிறகு தங்கமயிலின் அப்பா அம்மாவையும் கோவிலுக்கு வர சொல்கிறார்.

அதே மாதிரி மீனாவின் அப்பா அம்மாவும் வர வேண்டும் என்று ஆசைப்படும் பாண்டியன், மீனாவிடம் உங்க அப்பா போன் நம்பரை எனக்கு கொடு நான் பேசி அவரை கோவிலுக்கு கூப்பிடுகிறேன். அவர் வருவதும் வராததும் அவருடைய இஷ்டம் ஆனால் கூப்பிடுவது என்னுடைய சந்தோசம் என்று பாண்டியன், மீனாவிடம் சொல்கிறார். மீனாவும் சரி என்று சொல்லி நிலையில் பாண்டியன் கேட்டுக்கொண்டபடி போன் நம்பரை கொடுத்து விடுவார்.

இதனைத் தொடர்ந்து பாண்டியன் குடும்பம் குலசாமி கோவிலுக்கு கிளம்புவதற்கு தயாராகி விட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள போகும் குமரவேலு, அரசி போவதால் நாமும் அங்கே போய் அரசியை எப்படியாவது மடக்கி கல்யாணம் பண்ண வேண்டும் என்று ஒரு பிளான் போட்டு விடுவார்.

அதன்படி மானாமதுரைக்கு பாண்டியன் குடும்பம் போன நிலையில் குமரவேலுவும் போயி அரசி கழுத்தில் தாலி கட்டுவதற்கு சதி பண்ணப் போகிறார். இதில் எதிர்பார்க்காத திடீர் குழப்பங்கள் வரப்போகிறது என்று தெரியாத பாண்டியன் தற்போது சந்தோஷத்தில் மிதக்கிறார்.

Trending News