Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், வீட்டுக்கு வந்த மருமகள் புகுந்த வீடு ஒற்றுமைக்காக சில விஷயங்கள் செய்தாலும் இந்த அம்மாக்கள் சும்மா விடுவதில்லை என்பதை காட்டும் விதமாக பாக்கியம் சகுனி வேலை பார்த்து வருகிறார். ஏற்கனவே தங்கமயில் பொய் பித்தலாட்டம் செய்து பாண்டியன் வீட்டுக்கு மருமகளாக வந்துவிட்டார்.
அதன் பிறகு சரியான ஒரு மருமகளாக இருந்தால் கூட இவர் செய்த தில்லாலங்கடி வேலைகள் அனைத்தையும் மறந்து தங்கமயிலை ஏற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும். ஆனால் அதையும் கெடுக்கும் விதமாக பாக்கியம் சும்மா இருக்க மாட்டார். அதாவது கோமதி, மீனா ராஜி மீது கோபத்தில் இருப்பதால் பேசாமல் ஒதுக்கி வந்தார்.
குடும்பத்தின் ஒற்றுமையை பிரிக்க தங்கமயிலுக்கு ஐடியா கொடுத்த பாக்கியம்
இதை பார்த்த தங்கமயில், கோமதி ராஜி மற்றும் மீனாவை சேர்த்து வைக்கும் விதமாக கோமதியிடம் நைசாக பேசி மறுபடியும் இவர்கள் கூட்டணி சேர்வதற்கு உதவி செய்தார். இதை தங்கமயில், சந்தோஷ் உடன் அம்மாக்கு போன் பண்ணி சொல்கிறார். ஆனால் இதைக் கேட்ட பாக்கியம் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என்று தங்கமயிலை திட்டி விடுகிறார்.
ஏன் என்னாச்சு என்று தங்கமயில் கேட்கும் பொழுது, அவர்களுக்குள் ஏதாவது ஒரு பிரச்சினை என்று உனக்கு தெரிந்தால் அதை ஊதி பெருசாகி நிரந்தரமாக அவர்களை பிரிப்பதற்கு வழி பார்த்து இருக்கணும். அதுவும் முடியலைன்னா உன் வேலையை மட்டும் பார்த்து அமைதியாக இருந்திருக்க வேண்டியதுதானே. உன்னை யாரு பஞ்சாயத்து பண்ணி அவர்களை சேர்த்து வைக்க சொன்னா.
அவர்கள் சேர்ந்து விட்டால் உன்னை ஒதுக்கி விடுவார்கள். இது உனக்கு தேவையா என்று தங்கமயில் இடம் கோபமாக பேசுகிறார். இனிமேலும் இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அவர்களுடைய ஒற்றுமையை பிரித்து அதன் மூலம் உனக்கு அந்த வீட்டில் முதல் அதிகாரம் கிடைக்கும் படி செய் என்று ஐடியா கொடுக்கிறார். இதை கேட்ட தங்கமயிலும் சரி என்று சொல்லிவிடுகிறார்.
அடுத்ததாக கோமதி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது ராஜி மற்றும் மீனா சமரசம் செய்யும் வகையில் பேசி சமாதானப்படுத்துகிறார்கள். அப்பொழுது கதிர் மற்றும் ராஜி திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது தங்கமயில் உள்ளே வந்து விடுகிறார். உடனே இந்த விஷயம் தங்கமயிலுக்கு தெரியக்கூடாது என்பதற்காக அனைவரும் அமைதியாக வேற விஷயத்தை பேசுகிறார்கள்.
இதனை பார்த்து தங்கமயிலுக்கு அம்மா சொல்வது சரிதான் இவர்கள் ஒன்று சேர்ந்ததும் தன்னை உதாசீனப் படுத்துகிறார்கள் என்பது போல் நினைக்கிறார். இதனை தொடர்ந்து சக்திவேல், அண்ணனுக்கு பொண்ணு மேல் பாசம் வந்து விட்டால் சொத்துகள் எல்லாம் பாதி அங்கே போய்விடும்.
பிறகு நமக்கும் நம் பையனுக்கும் ஒன்றும் இல்லாமல் இருக்க வேண்டியது தான் என்பதை மனதில் வைத்து அவ்வப்போது முத்துவேல் மனதில் கோபத்தை உண்டாக்கும் அளவிற்கு சில விஷயங்களை பேசி முத்துவேல் பொண்டாட்டியிடம் கோபப்படும் அளவிற்கு சில தில்லாலங்கடி வேலைகளை பண்ணுகிறார்.
அந்த வகையில் கடைசியில் முத்துவேல், தம்பியை நம்பி அனைத்து சொத்து இழந்து தனியாக நிற்கப் போகிறார். அப்பொழுதுதான் ராஜி மற்றும் பாண்டியனின் அருமை முத்துவேலுக்கு தெரிய வரும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- பொறுமையை இழந்த மீனா, நாத்தனாரிடம் சொன்ன உண்மை
- மீனா ராஜியை ஒதுக்கி தகரமயிலுடன் கூட்டணி போட்ட கோமதி
- நைசாக பேசி மீனா ராஜியுடன் கூட்டணி சேர்ந்த பாண்டியன் மருமகள்