ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

மகன் பேசியதை கேட்டு அடிக்க கை ஓங்கிய பாண்டியன்.. தனிக்குடித்தனம் போக முடியாதுன்னு சொன்ன மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா எது கேட்டாலும் பாண்டியன் மறுப்பு தெரிவிக்கிறார் என்ற கோபம் செந்திலுக்கு இருக்கிறது. அத்துடன் என்ன நடந்தாலும் அதற்கு மீனா தான் காரணமாக இருக்கிறார் என்று பாண்டியன் அவ்வப்போது பேசி நோகடிப்பது செந்திலுக்கு பிடிக்கவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவை வெறுத்து ஒதுக்கி வருகிறார்.

அதிலும் ஒரு பேப்பருக்கு கூட சம்மதம் கொடுக்க மாட்டுகிறார், ஆனால் இதையெல்லாம் தாண்டி மீனா ரொம்பவே அட்ஜஸ்ட் பண்ணி எனக்காக எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து வருகிறார். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்று செந்தில், கதிர் சரவணன் மற்றும் பழனிச்சாமி இடம் புலம்பிக்கொள்கிறார். அப்பொழுது சரவணன், இப்ப என்ன உனக்கு பேப்பருக்கு பணம் வேண்டும் அவ்வளவு தானே என்று சொல்லி சட்டையில் இருக்கும் பையில் பணத்தை தேடி பார்க்கிறார்.

மீனாவை சமாதானப்படுத்தும் செந்தில்

ஆனால் அவரிடம் பணம் இல்லாததால் பழனிச்சாமி உன்னிடம் மட்டும் எப்படி பணம் இருக்கும். நீயும் வாங்கிய மொத்த சம்பளத்தையும் உங்க அப்பாவிடம் தானே கொடுக்கிறாய். அதனால் நீங்க என்ன நினைத்தாலும் வாங்க முடியாது என்று பழனிச்சாமி சொல்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த பாண்டியன், கடைக்கு போகாமல் வெட்டியாக இருந்து என்ன பேசிக் கொண்டிருக்கிறாய் என்று செந்தில் மற்றும் பழனிச்சாமியை திட்டுகிறார்.

அதற்கு செந்தில், நீங்க பண்ணினது தப்பு, மீனா பேப்பர் தான கேட்டா அதுக்கு அவ்ளோ கடுமையாக பேசணுமா? அன்னைக்கும் அப்படித்தான் மீனா மீது எந்த தப்பும் இல்லை எல்லோரும் முன்னாடியும் அவளை திட்டுகிறீர்கள். ரொம்ப கஷ்டமாக இருக்கிறது இனிமேல் இப்படி பேசாதீங்க என்று செந்தில், பாண்டியனிடம் சொல்கிறார்.

இதை கேட்டு கோபப்பட்ட பாண்டியன், எப்படி பேசணும் என்ன சொல்லணும் என்று நீ எனக்கு அட்வைஸ் பண்ணுகிறாயா? என்ன வர வர உன் பேச்சு, உன் நடவடிக்கை வேற மாதிரி போய்க்கொண்டிருக்கிறது. இதெல்லாம் சரியில்லை என்று செந்திலை திட்டி அடிப்பதற்கு கை ஓங்கி விட்டார். அந்த நேரத்தில் வந்த கோமதி, பாண்டியனை தடுத்து உள்ளே கூட்டிப் போகிறார்.

அதே மாதிரி செந்திலும் கோவப்பட்டு பைக் எடுத்துவிட்டு வெளியே கிளம்புகிறார். அப்பொழுது மீனா ஆபீசுக்கு போய்க் கொண்டிருப்பதால் பின்னாடியே செந்தில், மீனாவை சமாதானப்படுத்த பார்க்கிறார். மீனாவும் எதுவும் நடக்காத மாதிரி செந்திலிடம் பேசிக் கொள்கிறார். அப்பொழுது செந்தில், அப்பா பேசியதற்கு நான் சாரி சொல்கிறேன் என்று மன்னிப்பு கேட்கிறார்.

அதற்கு மீனா, நாம் இதில் கோபப்பட முடியாது. ஏனென்றால் தனிக்குடித்தனம் போகணும் என்று உன்னை கூப்பிட்டால் உன்னால் வர முடியுமா? என கேட்கிறார் அதற்கு செந்தில் நிச்சயமாக என்னுடைய குடும்பத்தை விட்டு வர முடியாது என்று கூறுகிறார். அப்படி என்றால் அந்த வீட்டில் என்ன நடந்தாலும் நாம் அமைதியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் சந்தோசமாக நம்மால் வாழ முடியும் என்று செந்திலுக்கு மீனா அட்வைஸ் பண்ணுகிறார்.

இப்படிப்பட்ட மீனாவிற்கு சந்தோசமாக ஒரு விஷயத்தை கொடுக்க வேண்டும் என்று செந்தில், கதிரை கூட்டிட்டு மீனாவின் அப்பா வீட்டிற்கு போகிறார். அங்கே மீனாவின் அப்பாவிடம் நீங்கள் எதிர்பார்த்தபடி கவர்மெண்ட் வேலையில் நான் சேர்ந்து உங்களுக்கு ஏற்ற மருமகனாக நான் உங்க மகள் மீனாவை கூட்டிட்டு இதே வீட்டுக்கு வந்து நிற்பேன். அப்பொழுது வாங்க மருமகன் என்று என்னை கூப்பிடுவீர்கள் என சவால் விட்டுவிட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News