திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மீனாவின் ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக நிராகரிக்கும் பாண்டியன்.. அடி வாங்கிய கதிரை சீண்டிப் பார்க்கும் ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி காலேஜுக்கு போக வேண்டும் என்பதால் கதிர் சைக்கிளில் வந்த பொழுது ராஜியை கதிருடன் சேர்த்து மீனா அனுப்பி வைத்துவிட்டார். மீனாவுக்கும் ஆஃபீஸ் நேரம் ஆகிவிட்டது என்பதால் செந்திலுக்கு போன் பண்ணி டிராப் பண்ண சொல்லலாம் என போன் பண்ணுகிறார்.

கடையில் இருக்கும் செந்திலுக்கு மீனா போன் பண்ணுகிறார். அப்பொழுது செந்தில் போனை எடுத்து பேசும் பொழுது மீனா, நான் ரொம்ப நேரம் பஸ்க்கு காத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் பஸ் ஏதும் வரவில்லை ஆபீசுக்கு நேரமாகிவிட்டது நீ என்னை வந்து ட்ராப் பண்ணு என கூப்பிடுகிறார். அதற்கு செந்தில், கடையில் கொஞ்சம் வேலை இருக்கிறது என்னால் வர முடியாது என்று பொறுமையாக எடுத்து சொல்லுகிறார்.

இதை பார்த்த பாண்டியன், செந்திலை திட்டும் விதமாக எப்ப பாத்தாலும் போனும் கையுமாக இருந்தால் வேலை எப்படி உருப்படும். வேலையில் கவனம் இல்லை என்றால் எப்படி கையில் பணம் சேரும் என்று மீனா லைனில் இருக்கும் பொழுதே திட்டுகிறார். உடனே மீனா, போனை கட் பண்ணி விடுகிறார். மீனா, பாண்டியன் வீட்டுக்கு ஒரு நல்ல மருமகளாகவும் பொறுப்பாகவும் இருந்தாலும் மீனாவுக்கு கிடைக்க வேண்டிய சின்ன சின்ன சந்தோசங்கள் எதுவும் கிடைக்காமல் இருக்கிறது.

அதுவும் பாண்டியன், மீனாவை உதாசீனப்படுத்தும் விதமாக மீனாவின் ஆசையை மறைமுகமாக நிராகரித்து வருகிறார். இதையெல்லாம் பார்த்து பொறுமையாக இருக்கும் மீனா ஒரு நாள் பொங்கி எழப்போகிறார். அப்பொழுது தான் மீனாவின் அருமை பாண்டியனுக்கு புரிய வரும். அடுத்ததாக ராஜி மற்றும் கதிர் சைக்கிளில் காலேஜுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி போகும் பொழுது ராஜி, பாண்டியனிடம் அடி வாங்கினதை பற்றிய பேசிக் கொண்டே கதிரை சீண்டி பார்க்கிறார். கதிரும் சமாளித்து வேறு ஏதாவது டைவர்ட் பண்ணி பேசினாலும் கடைசியில் ராஜி, பாண்டியனிடம் கதிர் அடி வாங்கினதை மட்டுமே சொல்லி வெறுப்பேற்றுகிறார். உடனே கோபப்பட்ட கதிர், ராஜியை சைக்கிளை விட்டு இறங்கி நடந்து போ என்று சொல்கிறார்.

ஆனால் ராஜி அப்படி இறங்கும் பொழுது கதிர் இறங்க விடவில்லை. ஏனென்றால் குமரவேலு பைக்கில் வருவதால் ராஜியை கதிர் சைக்கிளில் கூட்டிட்டு போக ஆரம்பித்து விட்டார். ஆனால் குமரவேலு சும்மா இல்லாமல் கதிர் போகும் சைக்கிளை தள்ளிவிட வேண்டும் என்பதற்காக பைக்கில் வேகமாக வருகிறார். இதைப் பார்த்த கதிர் உஷாராகி தப்பித்து விட்டார். கடைசியில் குமரவேலு பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டார்.

அடுத்ததாக கோமதி, அம்மா ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்து விட்டதால் வாசலில் நின்று கோமதி, அம்மாவிடம் நலம் விசாரித்து பேசுகிறார். இதை பார்த்த தங்கமயில் சாதாரணமாக எடுத்துக் கொண்டார். ஆனால் கோமதி, நான் இப்பொழுது பேசியதை மாமாவிடம் சொல்லி விடாதே என்று கேட்கிறார். அதற்கு தங்கமயில், நான் மாமாவிடம் போட்டுக் கொடுத்து விடுவேன் என்று நினைக்கிறீர்களா?

நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன், நீங்கள் ஆஸ்பத்திரிக்கு போகும் பொழுதும், சாப்பாடு எடுத்துட்டு போகும் பொழுது மாமாவிடம் சமாளிக்க நானும் முயற்சி செய்தேன் என்று சொல்லி ஹோட்டலில் என்னுடைய அஜாக்கதையால் அதிகமான தொகையில் புக் பண்ணி விட்டேன். அதற்கு என்னை மன்னித்து விடுங்கள். ஆனால் என்னிடம் தயவு செய்து பேசாமல் மட்டும் இருக்காதீங்க என்ற கெஞ்சுகிறார். உடனே கோமதியும் பாவப்பட்டு தங்கமயிலை மன்னித்து பேச ஆரம்பித்து விடுகிறார்.

Trending News