ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

கதிர் மீது பாசத்தை கொட்டும் பாண்டியன்.. சரவணன் தலையில் மிளகாய் அரைத்த தங்கமயில், கூட்டணி போட்ட மீனா ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மாமனாரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்ட தங்கமயில், மீனா ராஜியிடம் பிளான் பண்ணலாமா என்று கேட்டார். உடனே மீனா ராஜியும் சூப்பராக செய்துவிடலாம் என்று யாருக்கும் தெரியாமல் டிரஸ், கேக், கிப்ட் என வாங்கி விட்டார்கள். அத்துடன் கடைசி நேரத்தில் பாண்டியனின் மருமகள்கள், கணவர்களிடம் சொல்லி மாமாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று சொன்னார்கள்.

அதன்படி நடுராத்திரியில் 12 மணிக்கு மாமாவுக்கு வாழ்த்து சொல்லி கேக் கட் பண்ணலாம் என்று பிளான் பண்ணினார்கள். ஆனால் அதற்கு பாண்டியன் ஒத்துழைக்காததால் மறுநாளில் பிறந்த நாளை கொண்டாடலாம் என்று அனைவரும் முடிவு பண்ணி விட்டார்கள். அதன்படி பாண்டியன் குளித்துக் கிளம்பி வந்த நிலையில் அனைவரும் வாழ்த்துக்கள் சொல்லி கேக் கட் பண்ண வைத்து புது டிரஸ் கொடுக்கிறார்கள்.

வயசு வித்தியாசத்தில் மீனாவிடம் மாட்டப் போகும் தங்கமயில்

அத்துடன் மீனா வாட்ச் மற்றும் ராஜி செப்பல் போன்ற கிப்ட்களை கொடுக்கிறார். இதற்கிடையில் ஒவ்வொருவரும் பாண்டியனுக்கு வாழ்த்து சொல்ல வரும் பொழுது கதிர் மட்டும் தயக்கத்துடனே இருந்தார். ஆனாலும் கதிர் பாண்டியனுக்கு பிடித்த ஒரு இனிப்பு வகையை வாங்கிட்டு வந்து அதை அப்பாவிடம் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணி விட்டார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாண்டியன் ஆனந்த கண்ணீர் வடித்து கதிரை அரவணைத்துக் கொண்டார். அது மட்டுமில்லாமல் பாண்டியன் கேக் கட் பண்ணிட்டு ஒவ்வொருவருக்காக கொடுக்கும் பொழுது கதிருக்கும் பாண்டியன் ஊட்டி விட்டு இருவருடைய பாசத்தை காட்டும் விதமாக பாண்டியன், கதிர் மீது பாசத்தை கொட்டி தீர்த்து விட்டார்.

இதை எல்லாம் பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டது மட்டுமில்லாமல் கோமதிக்கு மனசு நிறைவாக அமைந்துவிட்டது. பிறகு ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து கோவிலுக்கு போகலாம் என்று பிளான் பண்ணி விட்டார்கள். ஆனால் பாண்டியன் மற்றும் கோமதி மட்டும் பைக்கில் போகட்டும் என்று கோவிலுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்.

அதன்படி பைக்கில் கோமதியை கூட்டிட்டு பாண்டியன் கோவிலுக்கு போகிறார். அப்பொழுது இவர்களுக்கு இடையே சின்ன சின்ன ரொமான்ஸ் மற்றும் பழைய ஞாபகங்கள் எல்லாம் பேசிக்கொண்டு ஒரு அழகிய தருணமாக சந்தோஷத்துடன் போகிறார்கள். ஆனால் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த வீட்டிற்கு ஒரு திருஷ்டியாக பாக்கியம் பொய்ப் பித்தலாட்டங்களை செய்து தங்கமயிலை மருமகளாக அனுப்பி வைத்திருக்கிறார்.

தங்கமயில், பாண்டியன் குடும்பத்திற்கு ஒரு நல்ல மருமகளாக இருந்தாலும் அம்மா பேச்சைக் கேட்டு அவ்வப்போது பல தில்லாலங்கடி வேலையை பார்க்க முயற்சி எடுக்கிறார். அத்துடன் தன்னுடைய வயசு மூத்தவரான சரவணனை கல்யாணம் பண்ணி இருக்கிறோம் என்பதுதான் தற்போது மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கிறது. அந்த வகையில் சரவணன் மற்றும் தங்கமயில் கல்யாணத்தை பதிவு பண்ணுவதற்காக ஆதார் அட்டையை பாண்டியன் கேட்க போகிறார்.

அப்பொழுது இதை தவிர்க்கும் விதமாக பாக்கியம் மற்றும் தங்கமயில் மறுபடியும் பித்தலாட்ட வேலைகளை பண்ணப் போகிறார்கள். பாவம் இதெல்லாம் தெரியாமல் சரவணன் தலையில் தங்கமயிலை கட்டி வைத்து விட்டார் பாண்டியன். ஆனால் ஆரம்பத்தில் இருந்து தங்கமயில் மீது மீனாவுக்கு மட்டும் சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது.

அதே மாதிரி ஆதார் விஷயத்திலும் மீனா சந்தேகப்பட ஆரம்பித்து விட்டார். அதனால் ராஜி மற்றும் மீனா கூட்டணி போட்டு தங்கமயில் பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News