வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ராஜியால் விபரீத முடிவு எடுத்த கதிர்.. சனியனை தூக்கி பனியன்ல போட்டுக்கும் குசும்பு புடிச்ச கோமதி

Pandian Stores 2 Today Episode: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தேவையில்லாமல் தன்னுடைய அண்ணன்களிடம் வம்பு இழுத்திருக்கிறார் குசும்பு புடிச்ச கோமதி. இதனால் பிரச்சனை என்னமோ கதிருக்கு தான் ஏற்படப்போகிறது. கோமதிக்காக தான் கதிர் ராஜியை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தந்தையின் பாசம் சுத்தமாகவே அறுந்து போன கதிர் மனம் வெறுத்துப் போய் காலேஜுக்கு போகவும் மறுக்கிறார். ‘இன்னும் மூன்று மாதத்தில் படிப்பு முடிந்து விடும் எதற்காக போகவில்லை என்று சொல்கிறாய்!’ என வீட்டில் இருப்பவர்கள் கதிரிடம் கேட்கின்றனர்.

யாராவது கல்யாணம் பண்ணிட்டு காலேஜ் படிக்கப் போவாங்களா! எனக்கு காலேஜுக்கு போக பிடிக்கல என்று சொல்கிறார். கதிரை போலவே ராஜியும் காலேஜுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். இதைக் கேட்டதும் வீட்டில் இருப்பவர்களுக்கு தூக்கி வாரி போட்டது, கோமதியும் கலங்கி போய் நிற்கிறார்.

Also Read: மனோஜ் மூலம் ரோகினிக்கு பெரிய ஆப்பை வைக்கும் விஜயா.. குதூகலத்தில் கொண்டாடும் முத்து

படிப்பை பாதியிலேயே நிறுத்த பார்த்த கதிர்

ஆனால் கதிரின் மூத்த அண்ணன் சரவணன், ‘ஏற்கனவே அப்பா ரொம்பவே ஒடஞ்சு போயிட்டாரு. இப்ப நீ படிப்பை நிறுத்தினால் அவர் தாங்க மாட்டார்’ என்று எடுத்து சொல்லி காலேஜுக்கு அனுப்புகிறார். அதன் பின் ராஜியும் காலேஜுக்கு செல்ல ஒத்துக்கொள்கிறார். பழனிவேல் தான் ராஜியை காலேஜில் விட செல்கிறார்.

ராஜி காலேஜுக்கு போவதை தன்னுடைய அண்ணன் முத்துவேலிடம் காட்ட வேண்டும் என்பதற்காகவே வாசலில் நின்று கொண்டே ஊருக்கே கேட்பது போல் கோமதி கத்துகிறார். ‘ என்ன தான் கல்யாணம் பண்ணிட்டு பிள்ளைகள் வந்தாலும் அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்புற ஆள் நாங்கள் கிடையாது. என்னுடைய மருமகளை காலேஜுக்கு அனுப்பி படிக்க வைக்கிறேன்’ என்று தன்னுடைய அண்ணன்களுக்கு கேட்கும்படி கோமதி கத்தி சொல்கிறார்.

இதை கேட்டதும் கோமதியின் அண்ணன் மற்றும் அம்மா எல்லோரும் வெளியே வருகின்றனர். சனியன தூக்கி பனியன்ல போட்டு கொண்டது போல் இனிமேல் தான் பிரச்சனையே ஆரம்பிக்கப் போகிறது. ஏற்கனவே கொலவெறியில் இருக்கும் குமார், கதிரால் தான் தன்னுடைய தங்கை வீட்டை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார் என்று அவரை பொளந்து கட்டப் போகிறார்.

Also Read: டாம் அண்ட் ஜெர்ரியாக இருந்த கதிர், ராஜிக்குள் புகுந்த ரொமான்ஸ்.. கல் மனசாக பரிதவிக்கவிட்ட பாண்டியன்

Trending News