புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கதையே இல்லாமல் உருட்டினால் இப்படித்தான் டிஆர்பி கம்மியாகும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்க்கு ஒரு எண்டு கார்டு இல்லையா!

Pandian Stores Serial: விஜய் டிவியில் பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ஒரு காலத்தில் ரசிகர்கள் எக்கச்சக்க வரவேற்பு கொடுத்து வந்தார்கள். ஆனால் இப்போது இயக்குனர் கதையே இல்லாமல் உருட்டி வருவதால் ரசிகர்களுக்கு அலுப்புத்தட்ட ஆரம்பித்துவிட்டது. அதுவும் நாளுக்கு நாள் மோசமாக சென்று கொண்டிருக்கிறது.

அதாவது மூத்த மருமகளான தனத்திற்கு கேன்சர் இருப்பதை மீனா மற்றும் முல்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடமிருந்து மறைத்து வைத்திருக்கிறார்கள். இதனால் அவசர அவசரமாக தனத்திற்கு பிரசவமும் பார்க்கப்பட்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. இப்போது குடும்பத்திற்கு தெரியாமல் தனத்திற்கு சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

Also read: பெண்களின் வீக்னஸ் பாயிண்டை யூஸ் பண்ணிய குணசேகரன்.. மொத்தத்துக்கும் ஜீவானந்தம் வைத்த ஆப்பு

அதாவது திருச்சியில் முல்லைக்கு ஒரு வாரம் பரிட்சை இருப்பதாகவும் அதற்கு மீனா மற்றும் தனம் இருவரும் துணையாக செல்ல வேண்டும் என்ற அனுமதி வாங்குகிறார்கள். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் எல்லோரிடம் சம்மதம் வாங்க மீனா படாத பாடுபடுகிறார். கடைசியில் ஒரு வழியாக சம்மதம் வாங்கி விடுகிறார்.

இருந்தாலும் தனத்திற்கு ஒரு பிரச்சனை இருக்கும் போது இத்தொடரை காமெடி காட்சி போல் இயக்குனர் உருட்டி வருகிறார். அதுவும் கதையே இல்லாமல் இப்படி உருட்டி வருவதால் விஜய் டிவியின் டிஆர்பி மிகப்பெரிய அடி வாங்கி இருக்கிறது. இதற்கு பேசாமல் இத்தொடருக்கு எண்டு கார்டு போட்டுவிட்டு வேறு ஒரு புதிய தொடரை ஒளிபரப்பலாம்.

Also read: கோமாவில் இருந்து வெளிவரும் அப்பத்தாவின் ட்விஸ்ட் ஆன மறுபக்கம்.. சைடு கேப்பில் கிடாய் வெட்டிய ஜீவானந்தம்

ஆரம்பத்தில் மக்களின் விருப்பமான தொடராக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்போது இயக்குனர் அதல பாதாளத்தில் தள்ளிவிட்டார். ஆகையால் ரசிகர்களே சீக்கிரம் இத்தொடருக்கு பூசணிக்காய் உடைக்க வேண்டும் என நச்சரிக்க தொடங்கி விட்டனர். ஆகையால் இறுதிக்கட்டத்தை நோக்கி இத்தொடர் சென்று கொண்டிருக்கிறது.

அதாவது தனத்தின் ஆபரேஷன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தெரியாமல் நடக்கவுள்ளது. மேலும் அதிலிருந்து அவர் குணமாகி வந்தவுடன் புது வீட்டு கிரகப்பிரவேசம் நடக்க இருக்கிறது. அதன் பிறகு மொத்த குடும்பமும் அந்த வீட்டில் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என இனிதே பாண்டியன் ஸ்டோர்ஸ் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

Also read: பத்தே நாளில் ஜீவானந்தத்தின் சோலியை முடிக்கும் குணசேகரன்.. சைக்கோ உடன் போட்ட கூட்டணி

Trending News