விஜய் டிவியில் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை தத்ரூபமாக காட்டிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் அண்ணன் தம்பி நான்கு பேரும் சேர்ந்து கஷ்டப்பட்டு கட்டிய டிபார்ட்மெண்ட் ஸ்டோரை பகையை மனதில் வைத்து கொண்டு மாநகராட்சி அதிகாரி ஒருவர் கடையை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் என்ன காரணத்திற்காக இப்படி செய்து விட்டீர்கள் என பலமுறை மாநகராட்சி உலகத்திற்கு ஏறி இறங்கினாலும் சரியான பதில் எதுவும் தெரியவில்லை. எனவே பிரச்சனைக்கு காரணமான ரவுடி ஒருவன் பழைய பகையை மனதில் வைத்திருக்கும் கடையை இழுத்து மூடி சீல் வைத்து இடிக்க திட்டமிட்டு இருப்பதால், அவனை தேடிக் கண்டுபிடித்து அடிக்கவேண்டும் என்ற ஆத்திரத்தில் கதிர், கண்ணன் இருவரும் அந்த ரவுடி கும்பலை கொலைவெறியுடன் தேடினர்.
ஆனால் அவர்கள் கதிர் கையில் சிக்காமல் ஓடி ஒளிந்து கொண்டனர். இது ஒருபுறமிருக்க மூர்த்தி, தனம் இருவரும் தங்களது பச்சைக் குழந்தையுடன் இரவு வரை அந்த மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இவர்களுடன் குடும்பத்தில் இருக்கும் முல்லை, ஜீவா, மீனா அவளுடைய குழந்தை உள்ளிட்டோரும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதனால் அலுவலகத்தில் இருப்பவர்கள் வேலை முடித்து வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்ட நிலையில், பிரச்சனை பெரிதாகி போலீஸ் அந்த இடத்திற்கு வந்தது. பின்பு அந்த அதிகாரி தன்னுடைய மகன் ரவுடிக்கு போன் செய்து, உன்னால் நான் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ளப் போகிறேன் என்று திட்டுகிறார்.
பிறகு அந்த ரவுடி இந்தப் பிரச்சினையை விட்டுவிடுங்கள். அவர்களது கடையை திறந்து விடுங்கள் என்று சொல்லுகிறான். அதற்கேற்றார்போல் போலீசார் விசாரித்த பிறகு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திடம் எந்த தவறும் இல்லை என்றும் மாநகராட்சி அதிகாரி தேவையில்லாமல் கடைசியில் சீல் வைத்திருப்பதும் தெரிய வந்தது.
அதிகாரியை கண்டித்த போலீஸ், அதன் பிறகு கடை திறப்பு விழாவை அமோகமாக நடத்த அனுமதித்து கடையில் சீல்லை அகற்றினர். எனவே வரும் வாரத்தில் பாண்டியன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் திறப்பு விழா கொண்டாட்டம் கோலாகலமாக ஒளிபரப்பாக உள்ளது.