புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறிய மருமகள்.. மீண்டும் சுக்குநூறாக உடையும் குடும்பம்

Pandian Stores: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எதிர்பாராத பல சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் ஒருவர் வீட்டை விட்ட வெளியேறி செல்கிறார். இதனால் மீண்டும் இந்த குடும்பம் சுக்குநூறாக உடைந்து இருக்கிறது.

அதாவது ஜனார்த்தனனை அவரது இளைய மருமகன் கத்தியால் குத்தி விடுகிறார். அந்த சமயத்தில் அங்கு வரும் போலீசாரிடம் தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு ஜீவா மற்றும் கதிர் இருவரும் வந்து இங்கு கலவரத்தை ஏற்படுத்தியதாக கூறுகிறார்.

Also Read : இந்த சீசனில் விஜய் டிவி இறக்கிவிடும் வாரிசு.. மொத்த லிஸ்டையும் பார்த்தா டிஆர்பி-கே பஞ்சம் இருக்காது போலையே

அதன் பிறகு ஜீவா மற்றும் கதிர் இருவரையும் போலீசார் கைது செய்து வைத்திருக்கின்றனர். மேலும் மூர்த்தி இவர்களை வெளியில் எடுப்பதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டும் தோல்வியில் முடிகிறது. இந்த சூழலில் மீனா தனது தந்தையை பார்க்க மருத்துவமனைக்கு செல்லும்போது எதர்ச்சையாக முல்லையின் மகன் பேசுவதை கேட்டு விடுகிறார்.

அதாவது போலீசாரிடம் இந்த கலவரத்தை ஏற்படுத்தியது ஜீவா தான் என்று பொய் வாக்குமூலம் கொடுக்கிறார். இதைக் கேட்ட மீனா, தந்தையின் நிலைமைக்கு ஜீவா மற்றும் கதிர் தான் காரணம் என்று முடிவு செய்து பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு விரைந்து செல்கிறார். அங்கு தனது மகள் மற்றும் ஆடைகளை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.

Also Read : பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பிஐ எடுத்து பிக்பாஸில் சொருகிய விஜய் டிவி.. அண்ணன் தம்பி பாசத்துக்கு வைத்து ஆப்பு

அப்போது எல்லோரும் தடுத்து காரணத்தை கேட்கும்போது இந்த வீட்டில் இருக்கவே பயமாக இருக்கிறது என்று கூறி சென்று விடுகிறார். ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தனித்தனியாக பிரிந்து சுக்குநூறாக இருந்த நிலையில் இப்போது தான் இணைந்தார்கள். இந்த சூழலில் புதிய பிரச்சனை வெடித்திருக்கிறது.

அடுத்ததாக ஜனார்த்தனன் கண் விழித்தால் மட்டுமே ஜீவா மீது எந்த தப்பும் இல்லை என்பது தெரியவரும். இதனால் மீனாவும் தான் பண்ணியது தப்பு என்று உணர இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இணைந்து சந்தோசமாக வாழ இருக்கிறார்கள்.

Also Read : ஜெயிலுக்குப் போகும் ஜீவா கதிர்.. பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு எண்டு கார்டே இல்ல

Trending News