சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சனியனை தூக்கி பனியனில் போட்டு கொண்ட பாண்டியன் குடும்பம்.. சகுனி வேலையை கச்சிதமாக செய்த மீனாவின் அப்பா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்வதால் இந்த சீரியலுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இருப்பினும் இந்த சீரியலில் இருக்கும் அண்ணன் தம்பிகள் மறுபடி மறுபடியும் மீனாவின் அப்பாவின் சகுனி வேலையில் சிக்கிக் கொள்வது சின்னத்திரை ரசிகர்களை எரிச்சலடைய வைத்திருக்கிறது.

ஏனென்றால் இதற்கு முன்பு மீனாவின் அப்பா வஞ்சகத்துடன், அவர்கள் வாழ்ந்த வீட்டை எழுதி வாங்கி நடுரோட்டிற்கு நிற்க வைத்தார். பிறகு தன்னுடைய இளைய மகளின் நிச்சயதார்த்தத்தில் பந்தியிலிருந்து எழுப்பி அவமானப்படுத்தினார். இப்படி வரிசையாக ஏகப்பட்ட விஷயத்தை மீனாவின் அப்பா செய்திருக்கிறார்.

Also Read: 24 வருட உறவை தூக்கி எறிந்த சன் டிவி.. ராதிகாவை தொக்கா தூக்கியா பிரபல சேனல்

இருப்பினும் தற்போது மீனாவின் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டு கால் உடைந்து போனதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அவரை பார்க்க சென்றுள்ளனர். ஆனால் அப்போதும் தன்னுடைய சகுனி வேலையை துவங்கிய மீனாவின் அப்பா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரின் வாயாலயே மொத்த கல்யாண வேலையையும் அண்ணன் தம்பி நான்கு பேரும் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்ல வைத்து விட்டார்.

இதன் பிறகு மீனாவின் தங்கை கல்யாணம் முடியும் வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அங்கேயே தங்கி இருந்து அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க போகின்றனர். கடைசியில் அவர்களை அசிங்கப்படுத்துவதை தான் மீனாவின் அப்பா வழக்கமாக வைத்திருப்பார். அதை தான் இப்போதும் செய்யப் போகிறார்.

Also Read: 19 வயது நடிகையை கட்டி அணைத்த வடிவேலு.. பெரிய மனுஷன் பண்ற வேலையா! முகம் சுளிக்க வைத்த புகைப்படம்

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மருமகள் மீனாவிற்காக திருமண வேலைகளை எல்லாம் முன்னெடுத்து பார்க்கப் போகின்றனர். ‘தன்வினை தன்னை சுடும்’ என்பது போல் ஒவ்வொரு சதி திட்டங்களையும் தீட்டி செயல்படுத்தும் மீனாவின் அப்பாவிற்கு, இப்போது விபத்து ஏற்பட்டு அடிபட்டுப் படுத்த படுக்கையாக இருப்பது போல் ஒவ்வொரு முறையும் ஏதாவது நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படியும் அவருடைய ஆட்டம் அடங்கிய பாடில்லை. தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வம்பு இழுப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார். அதெல்லாம் தெரிந்தும் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் தேவை இல்லாமல் சனியனை தூக்கி பனியன் போட்டுக் கொண்டனர். கடைசியில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

Also Read: மண்டையில இருந்த கொண்டையை மறந்த பாக்கியலட்சுமி.. கதை இல்லாமல் உருட்டும் விஜய் டிவி

Trending News