புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் மருமகள்.. உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

விஜய் டிவியில் பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது விறுவிறுப்பான கதை களத்துடன் சென்று கொண்டிருக்கிறது. இதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தனது பூர்வீக வீட்டை மீனாவின் அப்பா ஜனார்த்தனனுக்கு விற்க முடிவு செய்துள்ளனர்.

ஆனால் கதிரின் மாமியார் மீனாவின் அப்பாவிற்கு எப்படி வீட்டை விற்கலாம் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். மறுநாள் எல்லோரும் ரிஜிஸ்டர் ஆஃபீஸுக்கு கிளம்பி உள்ளனர். முல்லையும் கதிரிடம் இன்று ரிஜிஸ்டர் ஆபீஸ் போக வேண்டும் என ஞாபகப்படுத்துகிறார்.

Also Read : ராதிகா வீட்டுக்கு இனியாவை கூட்டிட்டு வந்த கோபி.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி

இந்நிலையில் மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நால்வரும் ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்று பத்திரத்தில் கையெழுத்து போடுகின்றனர். மேலும் மீனா, தனம் மற்றும் ஐஸ்வர்யாவை அழைத்து அப்பாவிற்கு நான் சாட்சி கையெழுத்து போடுகிறேன், நீங்க அவர்களுக்கு போடுங்கள் என்று கூறுகிறார்.

ஆனால் பத்திரமே மீனாட்சியின் பெயரில்தான் எழுதப்பட்டுள்ளதாக ஆபிஸர் கூறுகிறார். இதைக்கேட்ட மொத்த குடும்பமும் ஆச்சரியத்தில் உறைகிறது. ஆரம்பத்தில் இந்த வீடு ஜனார்த்தன் பெயரில் தான் எழுதுவதாக நினைத்து வந்த அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுப்பது போல மீனாவின் பெயரில் வீட்டை எழுத ஜனார்த்தன் முடிவு செய்துள்ளார்.

Also Read : பக்கா ப்ளான் போட்டு கவுத்த மருமகள்.. பலிகிடாவான மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யும்படி தனது அப்பா தான் இந்த வீட்டை வாங்குகிறார் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு தற்போது தன் பெயரிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் பூர்வீக வீட்டை எழுதிக் கொள்ள உள்ளார் மீனா. இதனால் தற்போது இந்த வீடு ஜீவா மற்றும் மீனாவுக்கு சொந்தமாக உள்ளது.

ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து கதிர் பிரிந்து போன நிலையில் மீண்டும் குடும்பம் சுக்கு நூறாக உடைய வாய்ப்புள்ளது. மேலும் மீனா பேருக்கு தான் இந்த வீடு பத்திரப்பதிவு ஆகிவுள்ளது என்ற விஷயம் முல்லையின் அம்மாவுக்கு தெரிந்தால் பிரளயமே வெடிக்கும்.

Also Read : இணையத்தில் கசிந்த பிக்பாஸ் நடிகையின் பலான வீடியோ.. விளக்கத்தைக் கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்

Trending News