திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பிஐ எடுத்து பிக்பாஸில் சொருகிய விஜய் டிவி.. அண்ணன் தம்பி பாசத்துக்கு வைத்து ஆப்பு

Pandian Stores: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக இந்த தொடர் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இப்போது சில அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு இருக்கிறது. ஆனாலும் அண்ணன் தம்பி பாசத்துக்கு எங்கள மிஞ்ச ஆளே கிடையாது என்பது போல தான் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பிஐ எடுத்து பிக் பாஸில் சொருகி இருக்கிறது விஜய் டிவி. அதாவது இந்த தொடரில் முக்கிய பிரபலம் ஒருவர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதுவும் மூர்த்தியின் தம்பிகளில் ஒருவர் தான் பிக் பாஸ் வீட்டுக்கு போக உள்ளார்.

Also Read : ரட்சிதாவின் சிபாரிசால் பிக் பாஸ்க்கு போகும் சீரியல் நடிகர்.. சாக்லேட் பாயை தூக்கிய விஜய் டிவி

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் உள்ள பிரபலங்களில் அதிக ரசிகர்கள் உள்ள நட்சத்திரம் கதிர். மிகவும் எதார்த்தமான நடிப்புடன் மக்கள் மனதை கவர்ந்த கதிரின் நிஜ பெயர் குமரன். இவர் நிறைய சின்னத்திரை தொடர்கள் மற்றும் டான்ஸ் நிகழ்ச்சி போன்றவற்றில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் பிக் பாஸில் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கண்டிப்பாக வெள்ளித்திரையில் ஜொலிக்கலாம் என்ற ஆசையில் குமரன் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிஆர்பி பெருத்த அடிவாங்க வாய்ப்பிருக்கிறது.

Also Read : பிக் பாஸ் வருகையால் ஊத்தி மூடும் ரியாலிட்டி ஷோ.. டிஆர்பி இல்லாததால் விஜய் டிவி எடுத்த முடிவு

மேலும் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரவீணா, விஷ்ணு, வனிதாவின் மகள் ஜோவிகா, பப்லு போன்ற பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அதுவும் இந்த முறை வித்தியாசமாக பிக் பாஸ் வீடு இரண்டாக இருக்கப் போகிறது. ஆகையால் பல எதிர்பாராத திருப்பங்கள் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் அரங்கேற இருக்கிறது.

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அண்ணன், தம்பி பாசமாக இருந்த நிலையில் இப்போது ஆப்பு வைக்கும் விதமாக கதிர் பிரிந்து போக உள்ளார். ஆகையால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகர் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் பத்து நாட்கள் தான் இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

Also Read : ஜெயிலுக்குப் போகும் ஜீவா கதிர்.. பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு எண்டு கார்டே இல்ல

Trending News