விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது பல எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற ஒரு ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பல பிரச்சினைகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கிறது. அதில் முக்கியமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிதாக திறக்கப்பட்ட இருக்கும் கடைக்கு அதிகாரிகள் சீல் வைப்பது போன்ற காட்சி வெளியானது.
இதைத்தொடர்ந்து சீரியலில் அடுத்தகட்ட பரபரப்பு ஆரம்பித்துள்ளது அதாவது மூர்த்தி மற்றும் தம்பிகள் அனைவரும் கடையை எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்கின்றனர். அதில் மூர்த்தி மற்றும் ஜீவா இருவரும் கடையைத் திறக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
ஆனால் பழைய பகையை மனதில் வைத்துக்கொண்டு அந்த அதிகாரி கடையை இடித்து தள்ளி விடுவேன் என்று மிரட்டுகிறார். ஏற்கனவே அவர்களுக்குள் சில பிரச்சினைகள் இருக்கிறது. அதாவது அந்த அதிகாரியின் மகன் கண்ணனிடம் வம்பு செய்ததால் கதிர் அவனை புரட்டி எடுத்தார்.
அதற்காக இப்போது அந்த அதிகாரி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பழி வாங்க கடைக்கு சீல் வைத்து விட்டார். இதனால் ஆவேசமான மூர்த்தி அலுவலகத்தின் வாசலிலேயே அமர்ந்துகொண்டு போராட்டம் செய்கிறார். இதனால் அந்த இடமே பரபரப்பாகிறது.
அப்போது அங்கு வந்து இதை பார்க்கும் தனம் தன் குழந்தையுடன் மூர்த்தியின் அருகே அமர்ந்து கொள்கிறார். இதனால் அங்கு இருக்கும் மக்கள் குழந்தையோடு அங்கு போராட்டம் செய்பவர்களுக்காக சப்போர்ட் செய்கின்றனர். இரவு வரை நீடிக்கும் அந்தப் போராட்டத்தில் ஐஸ்வர்யா மற்றும் மீனாவும் தன் குழந்தையுடன் சேர்ந்து கொள்கின்றனர்.
தற்போது இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது போன்று பல சம்பவங்களும் நம் சமுதாயத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதை குறிக்கும் விதத்தில் இப்படி ஒரு காட்சியை வைத்த டைரக்டருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.