சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஏழாம் அறிவை கசக்கி பிழிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. இவ்வளவு ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் அப்பா செய்த சூழ்ச்சியினால் தற்போது தங்குவதற்கு வீடு கூட இல்லாமல் குடும்பமே கதிர்-முல்லை தங்கி இருந்த சிறிய வீட்டில் குடியிருக்கின்றனர். இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பு தேவையா! என பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு சீரியலில் அடுத்த விசேஷத்திற்கு ரெடியாகி கொண்டிருக்கின்றனர்.

எப்போதுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏதாவது ஒரு விஷேசத்தை ஏற்பாடு செய்து அதை வைத்து ஒரு மாதம் கதையை ஓட்டி விடுவார்கள். இப்போது அவர்களுக்கு லட்டு மாதிரி ஒரு பாயிண்ட் கிடைத்துவிட்டது. அதை வைத்து இன்னும் ஆறு மாதம் கதை ஓடிவிடும்.

Also Read: கேமராவை மறந்து பைனலிஸ்ட், வின்னர் யாருனு அப்பட்டமாக கூறிய மைனா.. பதறிப்போன பிக் பாஸ்

அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் நான்கு அண்ணன் தம்பிகளில் 3-வது தம்பி கதிர்-முல்லைக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால் இருவருக்கும் குழந்தை பிறக்காது என டாக்டர் சொல்லிவிட்டார்கள். ஏனென்றால் முல்லைக்கு கருப்பையில் ஒரு சில பிரச்சனை இருப்பதால் கருத்தரிக்க வாய்ப்பு இல்லை என கூறப்பட்டது.

இதற்காக 5 லட்சம் செலவு செய்து, செயற்கை முறையில் கருத்தரிக்கும் முயற்சியும் செய்தார்கள். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்ட முல்லை பரிகாரங்கள் பலவற்றை செய்து நம்பிக்கையுடன் இருந்ததால் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார்.

Also Read: சீரியலில் தான் குடும்ப குத்துவிளக்கு.. கடற்கரையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்ட முல்லை

இதனால் அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படுவதால் வீட்டில் இருக்கும் அனைவரும் பல விதமான கருத்துக்களை சொல்கின்றனர். ஆனால் அவ்வப்போது காமெடியாகவும் வில்லியாகவும் மாறிக் கொண்டிருக்கும் மீனா தன்னுடைய ஏழாம் அறிவை கசக்கி பிழிந்து, நிச்சயம் முல்லை கர்ப்பமாகத்தான் இருக்கிறார்.

அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என அடித்து கூறுகிறார். இதன்பின் முல்லைக்கும் அந்த சந்தேகம் ஏற்படுவதால் மெடிக்கலுக்கு சென்று கிட் வாங்கி பரிசோதனை செய்யும் முடிவுக்கு வருகிறார். நிச்சயம் முல்லை கர்ப்பமாக தான் இருக்கப் போகிறார்.

Also Read: டிஆர்பி-யில் டாப் 6 இடங்களை ஆக்கிரமித்த ஒரே சேனல்.. புத்தம் புது சீரியல்களால் பின்னுக்குத் தள்ளப்பட்ட பிரபல சீரியல்கள்

அதற்காக தடபுடலான ஏற்பாடுகள் செய்து குடும்பத்தினரிடம் இதை அறிவிப்பது மட்டுமல்லாமல், கூடிய விரைவில் சிறப்பாக வளைகாப்பு நடத்தவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இயக்குனர் பக்கா பிளான் போட்டு இருக்கிறார். ‘அடப்பாவிகளா! தனத்துக்கு வந்த சீனை அப்படியே முல்லைக்கும் போட்டு வச்சிருக்கீங்க’ என சின்னத்திரை ரசிகர்கள் சலிப்படைந்துள்ளனர்.

Trending News