தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களில் ஒன்றுதான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர். கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து அண்ணன்-தம்பி பாசத்தை வெளிப்படுத்தும் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் கதிர் முல்லை கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல ஆதரவைப் பெற்று வருகிறது.
இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டு, ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதன்பின் அவருக்கு பதிலாக காவியா அறிவுமதி என்ற சீரியல் நடிகை தற்போது நடித்து வருகிறார்.
இவரது நடிப்பு சித்ரா அளவிற்கு வரவில்லை என்றாலும், ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது. அத்துடன் காவியா சமூகவலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து, அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் வீடியோக்களையும் அப்லோட் செய்வது வழக்கம்.
அதிலும் குறிப்பாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் வசனங்களை நடித்துள்ள வீடியோக்களை பெரும்பாலும் வெளியிட்டு வருகிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் பலரும் காவியாவை ‘குட்டி நயன்தாரா’ என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ படத்தில் இடம்பெற்ற வசனத்தை காவியா கண்ணில் லென்ஸ் வைத்துக்கொண்டு, கண்ணிமைக்காமல் நயன்தாரா போலவே நடித்திருக்கும் வீடியோவை அப்லோட் செய்துள்ளார்.
இந்த வீடியோவிற்கு அவருடைய ரசிகர்கள் எக்கச்சக்கமான லைக்குகளை குவிப்பது மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.