புதன்கிழமை, ஜனவரி 15, 2025

நீங்கதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் அத்தை.. கோமதியின் முகத்திரையை கிழிக்கும் மருமகள்

Pandian stores 2 today episode: விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், வலுக்கட்டாயமாக ராஜியை கதிர் தலையில் கட்டிவிட்டனர். அது பத்தாது என்று, இப்போது கதிர் மீது திருட்டுப் பழியும் விழுந்திருக்கிறது. இப்போது குடும்பத்தில் நடக்கிற எல்லா பிரச்சனைக்கும் காரணம் கோமதி தான்.

அவர்தான் தன்னுடைய அண்ணன் மகள் ராஜியின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று மகனின் வாழ்க்கையை பனையமாக்கி விட்டார். எல்லோரும் கதிரை ரொம்பவே கேவலமாக பார்க்கின்றனர். இதையெல்லாம் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத மீனா தன்னுடைய அத்தை கோமதி இடம் சரமாரியாக கேள்வி கேட்கிறார்.

‘நீங்கள் தான் எல்லாத்துக்கும் காரணம். ராஜியை திருச்செந்தூரில் பார்த்தபோது அவர்களது குடும்பத்திற்கு போன் பண்ணி எல்லா விஷயத்தையும் தெரியப்படுத்தி இருக்கணும். அப்படி செஞ்சிருந்தா இப்ப தேவையே இல்லாமல் நகை திருடு பழி கதிர் மீது வந்திருக்காது. எல்லாத்துக்கும் காரணம் சொல்கிற நீங்கள் இந்த நகை திருட்டுக்கும் ஏதாவது ஒரு கதையை உருவாக்கிட்டீங்கனா, கதிர் கொஞ்சமாவது தப்பிச்சிருப்பார்.

Also Read: 9 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி.. எப்படி கண்டுபிடித்தனர் ஸ்பா வீரர்கள்

கோமதியை விலாசிய மீனா

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டவில்லை என்றால் எல்லாம் உண்மையையும் வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லி விடுவேன்’ என்று கோமதியிடம் கோபமாக மீனா கேட்கிறார். இதை செந்திலும் பார்த்து விடுகிறார். குடும்பத்தில் நடப்பது யாருக்குமே எதுவுமே புரியவில்லை.

மறுபுறம் கதிர் திடீரென்று திருமணம் செய்து கொண்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் பாண்டியன் ரொம்பவே அமைதியாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் ரூமுக்குள் சென்று கதவையும் பூட்டிக் கொள்கிறார். ஏதாவது செய்து கொள்வாரோ! என்று வீட்டில் இருப்பவர்களும் பதறுகின்றனர்.

மேலும் ராஜியின் வீட்டில் இருப்பவர்களாலும் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. ராஜியின் அண்ணா பாண்டியன் வீட்டிற்கு வந்து கதிரின் சட்டையைப் பிடித்து, அடிக்க கை ஓங்குகிறார். ‘உன்னுடைய சாவு என் கையில் தான்’ என்றும் சொல்கிறார். இதை கேட்டதும் கோமதிக்கு கை, கால் நடுங்குகிறது. வீட்டில் இருப்பவர்களிடம் மொத்த உண்மையையும் சொல்லிவிடலாம் என்று யோசிக்கிறார். அவர் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read: விஜயாவிடம் தொக்காக மாட்டப் போகும் மீனா.. முத்துவின் சண்டையை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடும் ரோகிணி

Trending News