புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தொடர்ந்து கர்ப்பமாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள்.. மீனா கெதி அதோ கெதி

சின்னத்திரை ரசிகர்களின் இஷ்டமான சீரியல் ஆன விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தற்போது காமெடி டிராக்கில் சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் இந்த சீரியலில் இருக்கும் 3 மருமகள்களும் அடுத்தடுத்த வாந்தி எடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை வாந்தியன் ஸ்டோர்ஸ் ஆக மாற்றி விட்டனர்.

அதிலும் பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த முல்லை கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் சந்தோஷத்தை அளித்தது. அதைத் தொடர்ந்து கடைக்குட்டி கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவும் கர்ப்பமாக இருப்பது சீரியலை பார்க்கும் ரசிகர்களை குதூகல படுத்தியது.

Also Read: விஷத்தை கக்க ஆரம்பித்த ராட்சசன்.. ஈவு இரக்கமில்லாமல் நடந்து கொண்ட கோபியால் நடுத்தெருவிற்கு வரும் பாக்யா

இப்படி தொடர்ந்து இரண்டு மருமகள்கள் கர்ப்பமானதால், அவர்கள் இருவரும் வேலை செய்யாமல் ஓபி அடிக்கின்றனர். இதனால் மீனாவின் கெதி தான் அதோகதியாக மாறியது. இந்த இரண்டு பேருக்கும் பணிவிடை செய்து ஓஞ்சு போன மீனாவிற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மூத்த மருமகள் தனமும் கர்ப்பமாக இருப்பது சீரியலில் அதிரடி ட்விஸ்ட் ஏற்படுத்தியுள்ளது.

இதை எப்படி குடும்பத்தினரிடம் சொல்வது என தெரியாமல் தனம் முழித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே தனத்திற்கு ஒரு குழந்தை இருக்கும் பட்சத்தில் தற்போது இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையில் மைத்துனர்களின் மனைவிகளும் கர்ப்பமாக இருக்கும் சூழலில் அவர்களை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு தனத்திற்கு உள்ளதால் தன்னுடைய கர்ப்பத்தை கலைக்கும் விபரீத முடிவையும் அவர் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: டிஆர்பி-யில் தெறிக்க விட்ட டாப் 10 சீரியல்கள்.. அசைக்க முடியாத அசுரனாக மாறிய ஒரே சேனல்

ஆனால் தனத்தின் அம்மாவிற்கு இந்த விஷயம் தெரியும் என்பதால் அதை வீட்டில் போட்டு உடைத்து விடுவார் என்றும் சிலர் கணிக்கின்றனர். அடுத்தடுத்த கர்ப்பமாக இருக்கும் இந்த மூன்று மருமகள்களுக்கு இடையே மீனா கெதி தான் அதோகதியாக மாறப்போகிறது. ஏற்கனவே அவ்வப்போது வில்லியாகவும் டம்மி பீஸ் ஆகவும் காட்டப்படும் மீனா இனி அவரை முழுநேர காமெடி நடிகையாக பார்க்க போகிறோம்.

மேலும் இந்த சீரியலில் தங்குவதற்கு வீடு இல்லாத நேரத்தில் அடுத்தடுத்து மருமகள்கள் கர்ப்பமானதை வைத்து நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸ்கள் போட்டு பறக்க விடுகின்றனர். அதிலும் இந்த சீரியலின் பெயரையே பாண்டியன் ஸ்டோருக்கு பதில் ‘வாந்தியன் ஸ்டோர்ஸ்’ என மாற்றி விடுங்கள் என்றும் கலாய்த்து தள்ளுகின்றனர்.

Also Read: 2 முறை விவாகரத்தாச்சு.. 3-வது காதலனுடன் நெருங்கிய புகைப்படத்தை வெளியிட்ட டாப் சீரியல் நடிகை

Trending News