டிஆர்பியில் மங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. ஒரே கதையே வச்சு உருட்டினா இப்படிதான்

Pandian Stores: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இப்போது டிஆர்பியில் மந்த நிலையில் இருக்கிறது. இதற்கு காரணம் இயக்குனர் ஒரே கதையை உருட்டி வருவது தான். அதாவது ஒரு காலத்தில் விஜய் டிவியில் நம்பர் ஒன் சீரியல் என்ற இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இப்போது பின்னடைவை சந்தித்திருக்கிறது.

தனத்தின் சிகிச்சைக்காக பொய் சொல்லி விட்டு முல்லை மற்றும் மீனா ஆகியோர் திருச்சிக்கு சென்றிருந்தனர். முதல் சிகிச்சை நல்லபடியாக முடிந்து வீடு திரும்பி இருக்கிறார் தனம். ஆனால் வீட்டில் உள்ள யாருக்கும் தனத்திற்கு இப்போது அறுவை சிகிச்சை நடந்த விஷயம் தெரியாது. இந்நிலையில் தனம் வீட்டு வேலையை எடுத்து போட்டு செய்கிறார்.

Also Read : உடல் சுகத்திற்காக கல்யாணம் செய்து கழட்டிவிட்ட விஜய் டிவி நடிகை.. எல்லை மீறிய பயில்வான்

அப்போது முல்லை, ஆபரேஷன் செய்த பிறகு இப்படியெல்லாம் வேலை செய்யக்கூடாது என்று தனத்தை கண்டிக்கிறார். அந்தச் சமயத்தில் எதர்ச்சியாக அங்கு வந்த கதிர் எல்லா விஷயத்தையும் கேட்டு விடுகிறார். மேலும் முல்லையை தனியாக அழைத்து அண்ணிக்கு என்ன பிரச்சனை என்று அதட்டி கேட்கிறார்.

அதன் பிறகு தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருக்கும் விஷயத்தை முல்லை கதிரிடம் கூறுகிறார். ஆரம்பத்தில் மீனாவுக்கு மட்டும் தெரிந்த விஷயம் அதன் பிறகு முல்லைக்கு தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது கதிருக்கும் இந்த விஷயத்தை தெரியப்படுத்தி ஒரே கதையை உருட்டி வருகிறார் இயக்குனர்.

Also Read : வித்தியாசமான டைட்டிலுடன் முதல் முறையாக ஹீரோவான விஜய் டிவி புகழ்.. யோகி பாபுவை தொட்டுருவாரு போல

அதுமட்டுமல்லாமல் கதிருக்கு இந்த விஷயம் தெரிந்த நிலையில் குடும்பத்திடம் இதை சொல்ல முற்பட இருக்கிறார். அப்போதும் தனம் யாரிடமும் செல்லக்கூடாது என சத்தியம் வாங்கி விடுவார். ஏற்கனவே மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்த நிலையில் இப்போது இந்த விஷயத்தை சொன்னால் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.

அவரது உயிருக்கு கூட ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என ஏதாவது பேசி கதிரின் வாயை அடைத்து விடுவார் தனம். இவ்வாறு சுவாரசியமான கதைக்களம் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு பேசாமல் சீக்கிரம் இத்தொடரை முடித்து விடலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : சும்மா இருந்த கேப்டனை சொறிஞ்சு விட்ட விஜய் டிவி.. நாக்கை துருத்திக் கொண்டு வெளுத்து வாங்கிய சம்பவம்