விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பி நான்கு பேரும் சிறிய மளிகைக் கடையின் மூலம் தங்களுடைய தொழிலை துவங்கி தற்போது டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றை கட்டி உள்ளனர். ஆனால் அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கட்டுவதற்கு சரியான ஆவணத்தை சமர்ப்பிக்கவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கடையை இழுத்து மூடி சீல் வைத்துவிட்டனர்.
இருப்பினும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடம் சரியாக அனைத்து ஆவணமும் இருக்கிறது. இருப்பினும் தொழில் போட்டியால் ஒருசிலர் இதுபோன்று அரசு அதிகாரிகளை வைத்து செய்துள்ளனர். இதனை சரிசெய்ய மூர்த்தி, ஜீவா, கதிர் மூவரும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தாலும் அவர்கள் சரியாக பிடி கொடுத்து பேசவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கதிர் கஷ்டப்பட்டு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் கட்டி திறப்பு விழாவிற்கு தயாராக இருக்கும் நிலையில் தங்களுடைய கடையை இழுத்து மூடி சீல் வைத்து, அங்கு கால் கூட வைக்க முடியாத நிலைக்கு ஆக்கியதால் கடும் கோபத்தில் அதிகாரியை முறைத்துக் கொண்டது மட்டுமல்லாமல், பின் கடையின் முன் இருக்கும் தடுப்பையும் அகற்றி பூட்டை உடைக்க முயற்சிக்கிறார்.
அதன்பிறகு அந்த இடத்திற்கு காவலுக்கு இருந்த போலீஸ், கதிர் செய்வது தவறு என்று அவரைக் கண்டித்து தடுக்கின்றனர். இருப்பினும் கதிர் அதையெல்லாம் கேட்காமல் பூட்டை உடைக்க முயற்சிக்கிறார். இதன்பிறகு கதிர், காவல்துறையால் கைது செய்ய பட போகிறார். அத்துடன் இந்தப் பிரச்சனையை மீனாவின் அப்பாவிற்கு தெரியப்படுத்தி பிறகு அதிகாரியுடன் அவர் பேசி பிரச்சனையை சரி செய்ய உள்ளனர்.
கூட்டுக் குடும்பத்தை மையமாகக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை நடந்த ஒவ்வொரு பிரச்சினையிலும் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து போராடி அதனை சரிசெய்து விடுவார்கள். அதேபோன்று இந்த பிரச்சனையையும் எளிதாக சரி செய்யப் போகின்றனர். இருப்பினும் ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்பதற்கேற்ப பிரச்சினையே சரி செய்வதை விட்டுவிட்டு, கதிர் மேலும் மேலும் அந்த பிரச்சனையை பெரிதாக்கி கொண்டிருக்கிறார்.
கதிர் உடைய முன் கோபத்தினால் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். ஒருசிலர் பாடுபட்டு கட்டிய கடைக்கு பிரச்சினை வந்தால் இப்படிதான் கொந்தளிப்பார்கள் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.