புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு பிரியும் மீனா.. சரியாக காய் நகர்த்திய அப்பா

விஜய் டிவியில் கூட்டுக்குடும்ப கதைக்களத்தை கொண்டு பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில் தற்போது கண்ணன் வேலையை இழந்ததால் வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டு செலவுக்கு என்ன பண்ணப் போகிறோம் என ஐஸ்வர்யாவிடம் புலம்ப, ஐஸ்வர்யா அதெல்லாம் சமாளிச்சுடலாம் என ஆறுதல் கூறித் கண்ணனை தேற்றினாள்.

பின் காலையில் கண்ணன் வேலைக்கு செல்லாததை கவனித்த தனம் மீனாவிடம் ஏன் அவன் வேலைக்கு போகல உனக்கு ஏதாவது தெரியுமா எனக்கேட்க. மீனா, எங்க அப்பா எதுவும் சொல்லல அக்கா ஏதாவது விஷயம் என்றால் அப்பா உடனே சொல்லி இருப்பாரு என்று கூறுகிறாள்.

சிறிது நேரத்தில் தனத்தின் அண்ணி கஸ்தூரி, தனத்தின் வீட்டிற்கு வந்து தனத்தின் நலத்தை விசாரித்துவிட்டு பின் நானும் மல்லியும் டூர் போகப் போறோம் கொடைக்கானலுக்கு என்று சொல்கிறார். மேலும் தனத்திடமும் முல்லை இடமும் நீங்களும் வாங்க டூர் போ௧லாம் என கூப்பிட இருவரும் நைசாக மல்லி கூடவா வேணாம்னு நழுவி விட்டனர்.

இதைக் கேட்டு ஆர்வத்தில் இருந்த மீனா கஸ்தூரியிடம் நீங்க ரெண்டு பேர் மட்டுமா போறீங்க எனக் கேட்க, மீனாவின் ஆர்வத்தை அறிந்த கஸ்தூரி ஆமாம் நீயும் வா, கயலை நான் பாத்துக்குறேன்னு சொல்கிறார். மீனா சரி என்று சொல்ல வருவதற்கு முன்பே தனம் உடனே அதெல்லாம் வேணாம் நாங்களும் டூர் போவோம் என்று சமாளித்து விட்டார்.

பின்னர் மீனாவின் அப்பா கயலுக்கு ஜாதகம் எழுதுவது பற்றியும் கயல் பிறந்தநாள் பற்றியும் பேச மீனாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது சென்னையில் இருக்கும் கோவிலுக்கு மீனாவையும் ஜீவாவையும் ஒருமுறை சென்று வரவேண்டும் என்று மூர்த்தி இடமும் தனத்திடமும் மீனா அப்பா சொல்ல, உடனே தனம் எதுவும் யோசிக்காமல் சரி அவங்க ரெண்டு பேரும் தனியாக போய்ட்டு வரட்டும்.

திருமணத்திற்கு பிறகு அவர்கள் தனியாக எங்கும் செல்லவில்லை அதனால ஒரு டூர் மாதிரி போயிட்டு வரட்டும் என்று சொன்னதும் மீனாவும், மீனா அப்பாவும் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

Trending News