விஜய் டிவி டிஆர்பி யில் முன்னிலையில் இருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி நால்வரும் மளிகை கடை நடத்துவதை சுற்றி அமைக்கப்பட்டு இருக்கும் இந்த கதை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் மீனாவின் அப்பாவின் கடையில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வேலை பார்க்கின்றனர். ஆனால் மீனாவின் அப்பா, கண்ணன் மீது திருட்டுப் பட்டம் கட்டி கடையை விட்டு வெளியே துரத்துகிறார். இதனால் வீட்டு செலவை சமாளிக்க முடியாமல் திணறும் கண்ணன் ஒரு முடிவு எடுக்கிறார்.
அதாவது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வீட்டின் வாசலில் இட்லி கடை ஒன்று ஆரம்பிக்கிறார்கள். வேறு எங்கும் நல்ல வேலை கிடைக்காததால் இந்த வியாபாரத்தில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
அவர்கள் புதிதாக கடை ஆரம்பித்ததை பார்த்து வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். கண்ணன் மீது திருட்டு பழி விழுந்தது அவர்கள் யாருக்கும் தெரியாது.
அதனால் அவர்கள் கடையை பார்த்த மீனா, கண்ணனிடம் நாங்க பாண்டியன் ஸ்டோர்ஸ் வச்சிருக்க மாதிரி நீங்க பாண்டியன் ஹோட்டலா என்று கலாய்க்கிறார். கண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுவதை பார்க்கும் அவரின் அண்ணி தனம் அவர்களை நினைத்து பெருமை படுகிறார்.
கண்ணன் புதிதாக ஆரம்பித்த இந்த கடை நாளடைவில் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை போல ஹோட்டலாக மாறப்போகிறது. அண்ணன்களுக்கு இணையாக கண்ணனும் ஒரு தொழிலதிபராக உருவெடுக்க போகிறார்.
தற்போது கண்ணன் ஆரம்பித்த இட்லி கடை பற்றிய கதைதான் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் ஒளிபரப்பாக உள்ளது. இப்பொழுதுதான் கண்ணன் மீது சிறிது கோபம் குறைந்துள்ள மூர்த்தி கண்ணன் இப்படி ரோட்டில் இட்லி வியாபாரம் செய்வதை பார்த்து குடும்ப மானத்தை வாங்குகிறார் என்று குதிக்கப் போகிறார்.