விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கண்ணன் எப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் ஒன்று சேருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இதுகுறித்த புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் கண்ணன், மீனாவின் அப்பா கடையில் வேலை பார்க்கும் பையனுடன் ஏற்பட்ட தகராறில் படுகாயமடைந்து வீட்டில் இருக்கிறார். தனியாக கஷ்டப்படும் கண்ணன், ஐஸ்வர்யாவை பார்த்து தனம் வருத்தம் அடைகிறார்.
இதனால் தனம், மூர்த்தியிடம் இதுவரை நான் உங்களை மீறி எதுவும் செய்வதில்லை ஆனால் இப்போது ஒன்று செய்யப்போகிறேன் என்று கூறிவிட்டு கண்ணன் வீட்டுக்கு செல்கிறார். அங்கே இருக்கும் கண்ணனை இனி நீங்க தனியா கஷ்டப்பட வேண்டாம் என்னோட வாங்க என்று கையோடு அழைத்து வருகிறார்.
தனத்தின் இந்த செயலை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் நிற்கின்றனர். கண்ணனை வீட்டுக்குள் அழைத்து வரும் தனம், மூர்த்தியிடம் இனி கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் நம்ம கூட தான் இருப்பாங்க என்று சொல்கிறார்.
மேலும் இதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா என்று கேட்கிறார் கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார். இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நாம் எதிர்பாராத பல திருப்பங்களும், சுவாரஸ்யங்களும் வர இருக்கின்றது.
கண்ணன், ஐஸ்வர்யாவின் வரவினால் உண்டாகும் பிரச்சனைகள், மூர்த்தி தனம் இருவரிடையே ஏற்படும் விரிசல்கள் என்று வரும் வாரம் பல அதிரடி காட்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது.