வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தம்பிக்காக கொலைவெறியில் பாய்ந்த மூர்த்தி.. எதிர்பாராத திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்

Pandian Stores: பல வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தாலும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சமீப காலமாக கொஞ்சம் சலிப்பு தட்டும் வகையில் இருந்தது. ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டும் வகையில் இந்த வாரம் ஆரம்பித்ததில் இருந்தே சீரியலில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சொந்தமாக வீடு கட்டி குடியேறும் வைபவம் தான் இந்த வார காட்சிகளாக காட்டப்பட்டு வருகிறது. அதில் இன்றைய எபிசோட் வேற லெவலில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

Also read: ஜீவானந்தம் மனைவிக்காக கண்ணீர் விட்டு கதறும் எக்ஸ் காதலி.. குணசேகரனை வேட்டையாட போகும் வேட்டை நாய்

அதாவது அண்ணன் மூர்த்தியுடன் சண்டை போட்டுக் கொண்டு மாமனார் வீட்டில் தங்கி இருக்கும் ஜீவாவுக்கு அவ்வப்போது சில அவமானங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதன் உச்சகட்டமாக இன்று ஜீவாவின் சகலை விசேஷத்திற்கு வந்த இடத்தில் குடிபோதையில் அவருடைய சட்டையை பிடித்து ஆவேசமாக சண்டை போடுகிறார்.

இதனால் ஒட்டுமொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் அதிர்ந்து நிற்கும் வேலையில் மூர்த்தி தன் தம்பிக்காக வக்காலத்து வாங்குகிறார். ஜீவாவின் சட்டையை பிடித்த பிரசாத் மேல் கொலை வெறியில் பாய்ந்த மூர்த்தி என் தம்பி மேல் நீ எப்படி கையை வைக்கலாம் என்று ஆவேசத்துடன் சண்டை இடுகிறார்.

Also read: பாக்கியலட்சுமி சங்கத்தமே வேண்டாம், ஓட்டம் பிடித்த மருமகள்.. ராதிகாவிற்கு டஃப் கொடுக்க சொன்னதால் ஏற்பட்ட விபரீதம்

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜீவா அதிர்ச்சியில் நிற்க, தனம் உள்ளிட்ட குடும்பத்தினர் சந்தோஷத்தில் வார்த்தை வராமல் நிற்கின்றனர். என்னதான் குடும்பத்திற்குள் மனஸ்தாபம் இருந்தாலும் தம்பிக்கு ஒரு பிரச்சனை என்று வரும்போது மூர்த்தி ஒரு அண்ணனாக அங்கு சப்போர்ட் செய்தது ரசிகர்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது.

அந்த வகையில் பல நாட்களாக சலிப்பு தட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என்று ரசிகர்களை உற்சாகமடைய வைக்கும் அளவுக்கு இருக்கிறது. ஆக மொத்தம் ஒரு விசேஷத்தில் பிரிந்த உறவு மற்றொரு விஷேசத்தின் மூலம் இணைந்து விட்டது. இவ்வாறாக இன்றைய எபிசோட் பல திருப்பங்களுடன் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது.

Also read: மாமியாரை லெப்ட் அண்ட் ரைட் வாங்க போகும் மீனா.. ஒட்டுமொத்த குடும்பத்தின் வாயை அடைத்த புருஷன்

Trending News